தமிழ்நாடு

கரூர் துயர சம்பவம் : வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்கு பதிவு - காவல்துறை எச்சரிக்கை!

கரூர் துயர சம்பவம் குறித்து சமூகவலைத்தளங்களில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் துயர சம்பவம் :  வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்கு பதிவு - காவல்துறை எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கரூர் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பதிவுகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீதுவழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:-

கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உ உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.

இவ்வாறு, பொதுவெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories