தமிழ்நாடு

”நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கும் அன்புமணி” : அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி!

நாகரீகமற்று கொச்சையாக அன்புமணி ராமதாஸ் பேசி இருக்கிறார் என அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

”நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கும் அன்புமணி” : அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கரூரில் நடிகர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் அறிந்த அடுத்த நொடியே அமைச்சர் அன்பில் மகேஸ், கரூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று, நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.

அப்போது, உயிரிழந்த பள்ளி குழந்தைகளின் உடல்களைப் பார்த்து அமைச்சர் அன்பில் மகேஸ் அழுத காட்சிகள் இணையத்தில் வெளியாகி, பார்போர் அனைவரையும் கலங்க வைத்தது.

இந்த அழுகையின் வலியை உணராத பலர் அமைச்சரை விமர்சித்து வருகிறார்கள். அன்புமணி ராமதாஸ் அமைச்சரின் அழுகையை கொச்சைப்படுத்தியுள்ளார். இதற்கு, சொந்த தந்தையை கூட கொச்சைப் படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”மரியாதைக்குரிய அன்புமணி ராமதாஸ் அவர்கள், நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார்.

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்!

எங்கள் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல “எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!”. தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம்.

வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப் படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories