வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஊடகச் செயலாளர் திருமதி பி. அமுதா, இ.ஆ.ப., அவர்கள் சென்னை, தலைமைச் செயலகம், பிரதான கட்டடம், இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" குறித்து செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி
வரும் வியாழக்கிழமை செப்டம்பர் 25-ஆம் தேதி “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி சாதனையின் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இந்த முக்கியமான நிகழ்வில் தெலங்கானா முதலமைச்சர் அவர்களை சிறப்பு விருந்தினராக நமது அரசாங்கம் அவர்களை அழைத்துள்ளது. அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள். இந்த நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி, நான்கு மணி நேரத்திற்கு சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், ஏழு சிறப்பான திட்டங்களை பற்றி நாம் எடுத்துக்காட்டாக அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, நான் முதல்வன், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், விளையாட்டின் சாதனையாளர்கள், சிறப்புக் குழந்தை சாதனையாளர்கள் இது போன்ற ஏழு திட்டங்களை உள்ளடக்கிய இந்த சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நான்கு மணியிலிருந்து ஏழு மணி வரைக்கும் ஒவ்வொரு இந்த சிறப்பு திட்டத்தை பற்றி சாதனையாளர்கள், பயன்பெற்றவர்கள், பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள். அவர்களுடைய அனுபவங்களை பகிர்வார்கள். அதன் பின்னர் ஏழு மணியளவில் நம்முடைய சிறப்பு விருந்தினர் தெலங்கானா முதல்வர் அவர்கள் கலந்து கொள்வார்கள். 2025-26-ஆம் ஆண்டிற்கான புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களுக்கான நிதி வெளியீடும், மாணவர்களுக்கான 1000 ரூபாய் தரக்கூடிய ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில், 2.57 இலட்சம் குழந்தைகள் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயன்பெறவுள்ளார்கள். இதனை இந்த நிகழ்வோடு சேர்த்து இணைக்கப்பட்டுள்ளது. இந்த 7 திட்டங்களின் சிறப்பைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன்.
=> நான் முதல்வன் திட்டம் :
இது ஒரு முக்கியமான திட்டம். கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பள்ளிக் மாணவர்கள், கல்லூரிக் மாணவர்களுக்கு திறன் வளர்ச்சித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இதற்கும், இதற்கு முன்னால் நடைபெற்ற திறன் பயிற்சிக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், இந்த பயிற்சி online மற்றும் offline இரண்டு விதத்தில் நடைபெறுகிறது. சிறப்பான பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பயிற்சியாளர்களை கொண்டு இந்தத் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதுவரைக்கும், 14 இலட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் கோர்ஸில் கலந்து கொண்டு பல்வேறு கோர்ஸ் எடுத்திருக்கிறார்கள். ஒரு மாணவர் ஒரு கோர்ஸ் எடுத்திருக்கலாம் – ஒன்றுக்கும் மேற்பட்ட கோர்ஸும் எடுத்திருக்கலாம். மொத்தம் 41 இலட்சம் skill certificates பெறப்பட்டுள்ளது. இந்த கோர்ஸ் படிப்பதால், அவர்களுடைய திறன் மேம்படுகிறது. கல்லூரியிலும் இந்த கோர்ஸ் வழங்குகிறோம். கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு என்ன மாதிரியான கோர்ஸ் – பொறியியல் கல்லூரியில் படிப்பவர்களுக்கு என்ன மாதிரியான கோர்ஸ் – பாலிடெக்னிக் படிப்பவர்களுக்கு என்ன மாதிரியான கோர்ஸ் – கோர்ஸை மேப் செய்து வைத்திருக்கிறோம். இந்த கோர்ஸ்களை மேப் செய்ததால், மூன்று வருடங்களில் – முதல் வருடத்திற்கு என்ன கோர்ஸ் எடுத்துக் கொள்ளலாம் – இரண்டாம் வருடத்திற்கு என்ன கோர்ஸ் எடுத்துக் கொள்ளலாம் – மூன்றாம் வருடத்திற்கு என்ன கோர்ஸ் எடுத்துக் கொள்ளலாம் என்று பார்த்துக் கொள்ளலாம். இந்த கோர்ஸை பொறுத்தவரை, Spoken English, Computer like Coding or Personality Development or Industry core எதுவாகவும் இருக்கலாம். 500-க்கு மேற்பட்ட கோர்ஸ் இருக்கிறது. இதனால் அவர்களுடைய வேலைவாய்ப்பு நன்றாக இருக்கும்.
கடந்த ஆண்டுகளை விட, இந்த திட்டத்தால், ஓரு ஆண்டுக்கு சுமாராக 1 இலட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமான கிடைத்திருக்கிறது. இது ஒரு முக்கியமான திட்டம் – நம்முடைய மாநிலத்திலிருந்து நிறைய மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு நான் முதல்வன் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கிறது.
நான் முதல்வன் திட்டத்தில் ஒரு இணையதளம் இருக்கிறது. நான் கோர்ஸ் முடித்துவிட்டேன் என்று இந்த இணையதளத்தில் பதிவு செய்து விட்டால், Employer – Potential job seekers சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. Campus Placement-ல் வேலை கிடைக்கவில்லை என்றால், நான் முதல்வன் இணையதளத்தில் பதிவு செய்திருந்தால், அவர்கள் இந்த மாதிரியான கோர்ஸ் படித்திருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.
இந்தத் திட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் enroll செய்திருக்கிறார்கள் (both Govt Colleges and private colleges) அந்த மாணவர்களுக்கும் இந்த கோர்ஸ் இருக்கிறது. 300-க்கும் மேற்பட்ட career pathway (Animation pathway, Logistics pathway) எந்த pathway எடுத்துக் கொள்கிறீர்களோ அதில் இரண்டு, மூன்று கோர்ஸ் இருக்கும் – அந்த கோர்ஸ் எடுத்துக் கொண்டால், professional-ஆக ஆகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
நம்முடைய கல்லூரிகளில் இருக்கக்கூடிய Lecturers, Asst Professors, Professors அவர்களுக்கும் நான் முதல்வன் திட்டத்தில் கோர்ஸ் இருக்கிறது. Latest technology, latest innovation சில நேரங்களில் Lecturers and Asst Professors-க்கும் கிடைக்காமல் போய்விடும். ஆதலல், அவர்களுக்கும் பயிற்சி கொடுத்தால், அவர்கள் இதன் மூலம் திறனை வளர்த்துக் கொண்டால், மாணவர்களுக்கு நன்றாக பாடம் நடத்தமுடியும். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட Lecturers, Asst Professors, Professors இதனால் பயனடைந்திருக்கிறார்கள்.
=> முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் :
இந்தத் திட்டத்தின்படி, 37 ஆயிரத்து 416 பள்ளிக்கூடங்களில் இன்றைய தேதியில் நம்முடைய முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வழங்கிக் கொண்டிருக்கிறோம். 20 இலட்சத்து 59 ஆயிரம் குழந்தைகள் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். முதலில், அரசு துவக்கப்பள்ளிகளில் ஆரம்பித்தோம் - அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் ஆரம்பித்தோம் - பிறகு நகர்புறங்களில் ஆரம்பித்தோம் - எல்லாவற்றையும் சேர்த்து இன்றைய தேதியில், 37 ஆயிரத்து 416 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 20 லட்சத்து 59 ஆயிரம் குழந்தைகள் பயன் அடைந்திருக்கிறார்கள். குழந்தைகளுடைய வருகைப்பதிவேடு மேம்பட்டிருக்கிறது - குழந்தைகள் தினந்தோறும் பள்ளிக்கூடத்திற்கு வருகிறார்கள் - அவர்களுடைய படிப்பு திறன் மேம்பட்டு இருக்கிறது - அவர்களுடைய வீட்டில் பெற்றோர்களின் சிரமங்கள் குறைந்திருக்கிறது. மாணவர்களுக் மிகவும் ஆர்வமாக கல்வி கற்றுக் கொண்டு வருகிறார்கள் என்று இதன் மூலம் தெரிய வருகிறது.
=> புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் :
2023-ல் புதுமை திட்டம் தொடங்கப்பட்டது - 6 முதல் 12 வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு பெண்களாக இருந்தால் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத் தொகை கிடைக்கிறது. இதனால், மாணவிகள் அதிகமான அளவில் படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் GER என்று சொல்லக்கூடிய General Enrolment Ratio in Higher Eduction மிகவும் அதிகமான உள்ளது. மத்திய அரசின் AISHE - 47 சதவீதம் இந்தியாவிலேயே பெண் குழந்தைகள் தான் உயர்கல்வி படிப்பதில் நாம் தான் அதிகமாக இருக்கிறோம்.
UIMS – நம்முடைய தரவுகளின் அடிப்படையில், 12-ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி படிப்பதற்கு 75% இன்றைய தேதியில் நம்முடைய மாணவர்கள் பன்னிரண்டாவது முடித்துவிட்டு உயர்கல்வி படிப்பதற்கு போய்விடுகிறார்கள்.
இன்றைய தேதியில், நம்முடைய புதுமைப்பெண் திட்டத்தில் இதுவரைக்கும் 5 லட்சத்து 29 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.
கடந்த ஆண்டு முதல் தமிழ்ப் புதல்வன் என்ற சிறப்பு திட்டத் திட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய தேதியில், 3.92 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். இந்த ஆயிரம் ரூபாய் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. Extra course-ல் இணைந்து படிக்கிறார்கள். இந்த பணத்தை வைத்துக் கொண்டு Drawing, equipments, books வாங்கிக் கொள்கிறார்கள். சில மாணவர்கள் இந்த பணத்தை வைத்துக்கொண்டு, கல்லூரிக்கு வந்த பிறகு மாணவர்கள் ஆடை அணிவதில் அக்கறை காட்டுகிறார்கள்.
மாணவிகள் இலவசமாக பேருந்தில் வருகிறார்கள் – மாணவர்கள் சில நேரங்களில் பேருந்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள் – அனைத்து விஷயத்திலும் இந்த ஆயிரம் ரூபாய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று feed back செய்திருக்கிறார்கள்.
=> விளையாட்டு (Sports) :
548 கோடி செலவில் விளையாட்டிற்காக கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல, பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு 150 கோடி அளவில் பரிசுத் தொகை (cash prize) வழங்கியிருக்கிறார்கள். வீரர், வீரங்கனைகள் விளையாட்டில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் வென்று வருபவர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த அரசாங்கம் வழங்கி வருகிறது.
சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் மற்றும் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு தொகுதியிலும், ஒரு மினி விளையாட்டரங்கம் உருவாக்கப்படும் என்று நம்முடைய துணை முதலமைச்சரின் அறிவிப்பின்படி இதுவரைக்கும் 75 இடங்களில் மினி விளையாட்டரங்கள் அமைப்பதற்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு மினி விளையட்டரங்கம் கட்டுவதற்கான தொகை 3 கோடி ரூபாய்.
அதுமட்டுமல்லாமல், நம்முடைய கிராமப் புறங்களில் விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக கலைஞர் விளையாட்டுக் கருவிகள் 12,625 பஞ்சாயத்துக்களில் உள்ள குழந்தைகளுக்கு கலைஞர் விளையாட்டுக் கருவிகள் வழங்கப்பட்டு, குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டுப் பொருள்கள், சாமான்கள், மற்றும் மைதானங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதற்காக 86 கோடி ரூபாய் இதுவரைக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் நம்முடைய விளையாட்டு வீரர்களின் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் performance மேம்பட்டுக் கொண்டிருக்கின்றன. நிறைய சாதனையாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். சாதனையாளர்களை எல்லாம் ஊக்கப்படுத்துவதற்காக முதல்வர் கோப்பை கடந்த வருடம் மற்றும் இந்த வருடம் நடைபெற்றிருக்கிறது.
Tamil Nadu Sports Foundation என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக 29 கோடியே 63 இலட்சத்திற்கு நிதி உதவி பெற்றிருக்கிறார்கள். 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு support உதவித் தொகை மற்றும் தேவையான அனைத்து technical support-ம் வழங்கப்பட்டு வருகிறது.
=> MIMS (Mission International Medal Scheme) :
சர்வதேச அளவில் நாம் பதக்கம் வாங்கவேண்டும் என்று சொன்னால், திறமையான தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரரை நாம் concentrate செய்தாக வேண்டும். அவர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கி, அவர்களை வெளிநாட்டு கோச்சர் மூலமாக வெளிநாட்டிற்கு சென்று பயிற்சி செய்ய வைத்து அவர்கள் சர்வதேச அளவில் பதக்கம் வாங்கமுடியும். அதற்கான திட்டம் தான் இது. 21 பேருக்கு support செய்ததற்காக 12 இலட்சம் ரூபாய் தருகிறார்கள்.
இதுவரைக்கும் நம்முடைய சாதனைகள் இப்போது சமீபத்தில் நடந்த 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 26 தங்கம், 31 வெள்ளி, 35 வெண்கலம் மற்றும் ஆறாவது இடம். கடந்த ஆண்டுகளை விட better performance. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நிறைய பதக்கங்கள் பெற்றிருக்கிறோம்.
கிராமப் பகுதிகளில் நிறைய பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் இருக்கின்றார்கள். அவர்கள் உதவியின்றி கஷ்டப்படுகின்றார்கள். இதனால், பள்ளிக் கல்வித் துறை மூலமாக, இதுபோன்ற குறிப்பிட்ட குழந்தைகளையெல்லாம் தேர்வு செய்து அவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளிவில் உயர் கல்விக்கு உதவுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் IIT, NIT, Indian Institute of Foreign Trade, Food Tech., இதுபோன்ற பல்வேறு நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. முதல் வருடத்தை விட, இந்த வருடம் 1500 முதல் 2000 குழந்தைகள் பயனடைந்திருக்கிறார்கள்.
இது, தமிழ்நாடு மாடல் பவுண்டேஷன் மூலமாக குழந்தைகளின் Skills, Aptitude, Potential ஆகியவற்றை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வெளிநாட்டிற்கு படிப்பதற்கும், உள்நாட்டில் படிப்பதற்கும் அவர்கள் உதவிக்கொண்டிருக்கின்றார்கள். இதுவரை, சிறப்பு தேவைகள் கொண்ட மாணவர்கள் 150 பேருக்கு (Children with Special Need) பயிற்சி அளித்து அவர்களையும் படிக்க வைத்திருக்கிறார்கள். நீங்கள் சமூக வலைதளங்களில் பார்த்திருப்பீர்கள். இங்கு ஒரு சில குழந்தைகளைப் பற்றி சொல்ல விரும்புகிறேன்.
தமிழ்நாட்டைச் சார்ந்த தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த மிகவும் ஏழ்மையான பின்தங்கிய மாவட்டத்திலிருந்து முதல் பட்டதாரி பெண் தாய்வான் நாட்டிற்கு சென்று படித்துக்கொண்டிருக்கிறார். அது நமக்கெல்லாம் மிகிழ்ச்சி. ஏன் என்றால், நாம் எல்லாம் வெளிநாட்டிற்கு சென்று படிக்க முடியுமா? என்று நினைக்கும் அளவிற்கு அவர்கள் முன்னுதாரணமாக இருப்பார்கள். அதேபோன்று, தர்ஷினி என்னும் பெண் Food Tech., Institution இல் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கிறார். அவரும் முதல் பட்டதாரி மாணவர்தான். அதேபோன்று, சந்துரு எனும் மாணவன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள IIT Roorkee இல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் முதல் தலைமுறை மாணவர்கள். இவர்களுக்கு மாநில அரசின் உதவியால் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் திறன்மிக்க Premier Institutions இல் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதுபோன்ற அனைத்து திட்டங்கள் பற்றி தான் நாம் வரும் வியாழக்கிழமை 25.9.2025 அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் மாபெரும் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியின் கொண்டாட்ட நாளாக கொண்டாடப் போகிறோம். சிறப்புத்திட்டங்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் கல்வியின் வளர்ச்சி, அதற்கான அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் குறித்து விளக்குவதற்காகவும், சாதனையாளர்களை அழைத்து கவுரவிப்பதற்காகவும் விருது வழங்குவதற்காகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.