தமிழ்நாடு

“தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் புதிய அடித்தளமாக இவை அமையும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

“தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன.”

“தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் புதிய அடித்தளமாக இவை அமையும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி மதிப்பில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட் (Cochin Shipyard Limited) நிறுவனமும், மசகன் டாக் கப்பல் கட்டும் (Mazagon Dock Shipbuilders) நிறுவனமும் தலா ரூ.15,000 கோடி முதலீட்டில், இந்த இரு கப்பல் கட்டும் தளங்களையும் அமைக்க இருக்கின்றன.

இதனால், சுமார் 5,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள், 40,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகள் என மொத்தம் 45,000 வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளன.

“தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் புதிய அடித்தளமாக இவை அமையும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இது குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “தமிழ்நாட்டில் அமைய இருக்கும் இரு கப்பல் கட்டும் தளங்களும் மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் துணையாக அமையும். தமிழ்நாடு அரசின் முயற்சியால், மேலும் புதிய கப்பல் கட்டும் தளங்கள் வருங்காலத்தில் அமைக்கப்படும்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும், முதன்முறையாக வெளியிடப்பட இருக்கும் தமிழ்நாடு கடல்சார் போக்குவரத்து உற்பத்தி கொள்கை 2025-க்கு அடித்தளமாக அமைந்துள்ளன” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை!

இப்போது, தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன.

தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் புதியதொரு அடித்தளமாக இவை அமையும்!” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories