தமிழ்நாடு

“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்

“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கையில் அதிமுக சென்றதையடுத்து பாஜக சொல்படியே அதிமுக செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்து பெரும் தோல்வியை சந்தித்த பிறகும், கூட்டணியை விட்டு அதிமுக விலகவில்லை. மேலும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவை கடுமையாக விமர்சித்தபோதும் கூட்டணியை விட்டு அதிமுக விலகவில்லை.

மேலும் பெரியார், அண்ணா, ஜெயலலிதா என பலரையும் பாஜக விமர்சித்தபோதும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது பழனிசாமி தலைமையிலான அதிமுக. ஒரு கட்டத்தில் சொரணை வந்த பழனிசாமி, இனி வரும் எந்த தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என்று கூறிய சில மாதங்களிலேயே 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் கூட்டணி வைத்தது அதிமுக. அப்போது வரலாறு காணாத தோல்வியை அதிமுக சந்தித்த நிலையில், மீண்டும் இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று கூறினார் பழனிசாமி.

எனினும் அவரது பேச்சு தண்ணீரில் எழுதுவதற்கு சமம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக வரும் 2026 சட்டபேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என அறிவித்தது. இப்படி தொடர்ந்து பாஜகவுக்கு அடிமையாக இருந்து வரும் அதிமுகவுக்கு தமிழ்நாடு மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் கண்டனங்கள் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்

இதற்கிடையில் ஏற்கனவே அதிமுக பல்வேறு அணிகளாக இருக்கும் நிலையில், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் பழனிசாமிக்கு கெடு வைத்து, அவரை பழனிசாமி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி இப்படியாக பல கூத்துகள் அதிமுகவில் அரங்கேறி வருகிறது.

இந்த சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க சென்ற எடப்பாடி பழனிசாமி, பத்திரிகையாளரை சந்திக்காமல் காரில் சென்றபோது, தனது முகத்தை கைக்குட்டையால் மூடியபடி சென்றார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில், தற்போது அதனை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் நிரஞ்சன் குமாருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிமுகவின் இந்த நோட்டீஸ் ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பத்திரிகையாளர் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி அடுக்கனுக்கான கேள்விகளால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்

இதுகுறித்து எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி வெளியிட்டுள்ள கண்டன பதிவு வருமாறு :

ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வரும் போது எடப்பாடி பழனிசாமி, தன் முகத்தை கைக்குட்டையால் மூடியபடியே காரில் சென்ற வீடியோவை பதிவு செய்த பத்திரிகையாளர் நிரஞ்சன் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது அதிமுக.

கூட்டணிக்குள் இருந்து கொண்டே ’’தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அனைத்துக் கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவேன்’’ என அண்ணாமலை சொன்ன போது....

"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழலுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்’’ என அண்ணாமலை கர்ஜித்த போது...

’’1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அண்ணாவை, முத்துராமலிங்கத் தேவர் மிகக் கடுமையாக சாடினார். மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்குப் பால் அபிஷேகத்துக்குப் பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்தார். அதற்குப் பயந்து அண்ணா ஓடிவந்து மன்னிப்பு கேட்டார்’’ என்று அண்ணாமலை பொய்ச் செய்தியை விதைத்த போது..

’’ஆண்மையற்ற அதிமுக தலைவர்கள்’’ என ஆடிட்டர் குருமூர்த்தி கொச்சையாக வசைபாடிய போது...

மிகக் கேவலமாகப் பிச்சை எடுப்பவர்கள் என விமர்சித்து துக்ளக் வார இதழில் குருமூர்த்தி கார்ட்டூன் போட்ட போது....

யாருக்கெல்லாம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக Legal Notice அனுப்பினார்கள்? என்ற விவரம் எம்.ஜி.ஆர் மாளிகையில் இருந்தால், எடப்பாடி பழனிசாமி அவர்கள் பகிர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அம்மா என்று கட்சியினர் அழைக்கும் ஜெயலலிதாவை... கட்சியில் பெயர் தாங்கி நிற்கும் அண்ணாவை... விமர்சித்த போது வராத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்ட போது விம்மி துடிக்குது. ஜெயலலிதாவை, அண்ணாவைக் கேவலமாக விமர்சித்த போது அதிமுகவின் வழக்கறிஞர் அணி பிணியில் இருந்ததா?

banner

Related Stories

Related Stories