தமிழ்நாடு

முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!

எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணி சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.

முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கையில் அதிமுக சென்றதையடுத்து பா.ஜ.க சொல்படியே அ.தி.மு.க செயல்பட்டு வருகிறது. அவர்களது கை அசைவுக்கு தமிழ்நாட்டில் பொம்மையாக செயல்பட்டு வருகிறார் பழனிசாமி.

பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை பா.ஜ.கவினர் விமர்சித்தாலும் பழனிசாமிக்கு கொஞ்சம் கூட கோவம் வரவில்லை. அந்த அளவிற்கு சொரணை அற்றவராக இருந்து வருகிறார் பழனிசாமி.

ஆட்சியில் இருந்தபோதும் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்தார்கள். தற்போது எதிர்க்கட்சியாக இருந்தும் பா.ஜ.கவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து கொண்டு தங்களது துரோகங்களை தொடர்ந்து வருகிறது பழனிசாமி தலைமையிலான அதிமுக.

அதிமுக பல்வேறு அணிகளாக இருக்கும் நிலையில், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் பழனிசாமிக்கு கெடு வைத்து, அவரை பழனிசாமி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி இப்படியாக பல கூத்துகள் அதிமுகவில் அரங்கேறி வருகிறது.

இந்த சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க சென்ற எடப்பாடி பழனிசாமி, பத்திரிகையாளரை சந்திக்காமல் காரில் சென்றபோது, தனது முகத்தை கைக்குட்டையால் மூடியபடி சென்றார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், பழனிசாமியின் கள்ளக் கார் பயணங்களும், கேள்விகளும்? என திமுக தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி எழுப்பி சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

1. வெள்ளை அரசு வாகனத்தில் சென்றதாக சொல்லும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வரும் போது எப்படி ரூ.8 கோடி மதிப்புள்ள DL2CAN 9009 பதிவெண் கொண்ட கருப்பு Bentley தனியார் சொகுசு காரில் வந்தார்?

2. டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பல கார்களில் மாறி மாறி மறைந்திருந்தே போகும் மருமம் என்ன?

3. கட்சி தொடர்பான சந்திப்பு என்றால் கட்சியினர் உடனிருக்க வேண்டும், அரசு அலுவல் என்றால் அதிகாரிகள் உடனிருக்க வேண்டும், தனிப்பட்ட குடும்ப நிகழ்வென்றால் குடும்பத்தினர் இருக்கலாம்! ஆனால் திரு அமித்ஷா இல்லத்தில் இருந்து வெளியே வந்த காரில் பழனிசாமி உடன் இருந்தது யார்?

4. பழனிசாமியுடன் இருப்பவர் யார்? அவர் ஏன் தன் முகத்தை மறைக்க வேண்டும்?

5. அமைச்சருக்கு நிகரான கண்ணியமிக்க தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பில் இருக்கும் பழனிசாமி அவர்கள் தனது முகத்தை மறைத்துக் கொண்டு அமித்ஷா அவர்களின் இல்லத்திலிருந்து வெளியேறுவது ஏன்? என்ன அவசியம்? என்ன நிர்பந்தம்? எதை மறைக்கிறார்? யாரை மறைக்கிறார்?

செய்தியாளர் சந்திப்பில் தடுமாறும் பழனிச்சாமியிடம் இந்த கேள்விகளுக்கு பதிலுண்டா?

இவ்வாறு திமுக தகவல் தொழில்நுட்ப அணி கேள்விகளை எழுப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories