அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பதற்காக, அக்கட்சி நிர்வாகிகள் விதிமுறையை மீறி பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் பேனர்களையும், கட்- அவுட்டுகளையும் வைத்து வருகிறார்.
இன்று திருப்பூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். மேலும் பல்லடம் பகுதிக்கு வருகை தருகிறார். இந்நிலையில் இவரை வரவேற்கும் விதமாக அரசு பள்ளியின் வழியை மறித்து கட் அவுட் வைத்துள்ளனர்.
இதனால் காலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தலையை குனிந்த படியே பள்ளிக்கு மாணவர்கள் சென்றனர். மேலும் சாலைகளை சேதப்படுத்தியும் மாணவர்களை வைத்துள்ளனர்.
இதையடுத்து, விதிகளை மீறி சாலைகளை சேதப்படுத்தியதன் காரணமாக பல்லடம் நகராட்சி சார்பில் அ.தி.மு.க-வினருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.