வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்வது போல், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பல்வேறு மாற்றங்களை ஒன்றிய தொழிலாளர் நலத்துறை எடுத்து வருகிறது.
அதன்படி புதிய மாற்றத்தின் மூலம் பணத்தை எடுப்பதற்கு, வருங்கால வைப்புநிதி அலுவலத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. அதற்கு பதிலாக உறுப்பினர்கள் வைப்பு நிதியை வங்கிகளில் எடுப்பதுபோல தங்களின் யு.ஏ.என் எண்ணைப் பயன்படுத்தி ஏடிஎம்களில் எடுக்கலாம்.
இந்த வசதி அடுத்த மாதத்தில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது. தற்போது, வைப்பு நிதியில் இருந்து உறுப்பினர் தனது பணத்தை எடுக்க நீண்ட நடைமுறை செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால், புதிய மாற்றத்தின் மூலம் பணம் எடுக்கும் வசதி எளிமையாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.