தமிழ்நாடு

மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்துக்கு 'முரசொலி செல்வம் விருது' ... விவரம் உள்ளே !

மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்துக்கு 'முரசொலி செல்வம் விருது' ... விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்துக்கு முரசொலி அறக்கட்டளை சார்பில் 'முரசொலி செல்வம் விருது' வழங்கப்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கடந்த 21.10.2024 அன்று சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற ‘முரசொலி செல்வம் அவர்களின் படத்திறப்பு' நிகழ்ச்சியில்,

“முரசொலி செல்வம் அவர்கள் பெயரால் ஆண்டுதோறும் விருது வழங்குவது; அதனை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் முப்பெரும் விழா நிகழ்ச்சியில் வழங்கப்படும்” என திராவிட திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தற்கிணங்க;

மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்துக்கு 'முரசொலி செல்வம் விருது' ... விவரம் உள்ளே !

ஊடகத்துறையில் ஐம்பது ஆண்டுகால அனுபவம் பெற்றவரும் ‘தி இந்து’, ‘பிசினஸ் இந்தியா’, ‘அவுட் லுக்’ ஆகிய பத்திரிகைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவரும் - இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் Reuters Fellow-ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றிய - மாநில அரசு உறவுகள் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டவரும் - பத்து ஆண்டுகள் தெற்காசிய ஊடக வளர்ச்சி நிறுவனமான Panos South Asia-வின் நிருவாக இயக்குநராகச் செயல்பட்டவரும்,

– அதே காலத்தில் Global forum for Media Development- இன் துணைத் தலைவராகப் பணியாற்றியவரும் - தற்போது, தமிழ்நாடு அரசு புதிதாக நிறுவியுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் தலைமை இயக்குநராகப் பணியாற்றி வருபவரும் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை உலகப் புகழ்பெற்ற பெங்குயின் நிறுவனத்திற்காக ஆங்கிலத்தில் “Karunanidhi - A Life” என்ற நூலை எழுதியவருமான மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் அவர்களுக்கு 2025ஆம் ஆண்டிற்கான 'முரசொலி செல்வம் விருது' வழங்கப்படும் என அறிவிப்பதில் முரசொலி அறக்கட்டளை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

2025ஆம் ஆண்டிற்கான ஆண்டிற்கான 'முரசொலி செல்வம் விருது' வருகிற 17-09-2025 அன்று மாலை 6.00 மணியளவில் கரூர், கரூர் பை-பாஸ் சாலை, கோடங்கிபட்டியில் நடைபெறும் 'தி.மு.க. முப்பெரும் விழா'வில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படவிருக்கிறது"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories