தமிழ்நாடு

505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

தி.மு.கவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் தொலைநோக்குத் திட்டங்களின் செயலாக்கம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி.செழியன் ஆகியோர் கூட்டாக விளக்கினார்.

அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, திராவிட மாடல் ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு இல்லாமல், இயற்கை பேரிடர்களை தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக கையாண்டது என்றும் அவர் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை எட்டி தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது என்றும், நாட்டிற்கே வழிகாட்டும் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் ஒன்றிய அரசே பாராட்டும் நிலையில், அவர்களது கூட்டணியில் இருக்கும் பழனிசாமிக்கு அதனை ஏற்க ஏன் மனமில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சாடினார். பழனிசாமி மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் விமர்சித்தார்.

மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் சமூகத்தில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என்றும், இத்திட்டங்கள் பெண்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

சொல்லாமல் நிறைவேற்றியுள்ள திட்டங்கள்!

புதுமைப் பெண் திட்டம் - 5,12,433 மாணவிகள் பயன்

தமிழ்ப் புதல்வன் - 3,86,368 மாணவர்கள் பயன்

மக்களைத் தேடி மருத்துவம் - 2.14 கோடி பயனாளிகள்

இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் - 3.57 லட்சம் பயானாளிகள்

முதல்வர் மருந்தகம் - 1000 மருந்தகங்கள்

கலைஞர் கனவு இல்லம் - 2 லட்சம் வீடுகள்

பாதம் காப்போம் - 14,201 பயனாளிகள்

வடசென்னை வளர்ச்சித் திட்டம் - 235 பணிகள்

அயொத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் - 3,658 பணிகள்

தொல்குடி மேம்பாட்டுத் திட்டம் - 26 மாவட்டங்களில் 560 உட்கட்டமைப்பு பணிகள், 750 வீடுகள், 26 அனுகு சாலைகள்

அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம் - 3,166 பயனாளிகள்

கலைஞர் கைவினைத் திட்டம் - 9,326 பயனாளிகள்

கோயில் நிலம் மீட்புப் பணிகள் - 7,439 ஏக்கர் நிலங்கள் மீட்பு, 1,532 கிரவுண்ட் காலி மனைகள், 253 கிரவுண்ட் கட்டடங்கள்

பழமையான கோயில் பராமரிப்புப் பணிகள் - 274 திருக்கோயில்கள்

கிராமப்புற கோயில் பராமரிப்புப் பணிகள் - 10,000 திருக்கோயில்கள்

அறிவுசார் மையங்கள் - 100 ட்

தோழி விடுதி - 13

உங்களுடன் ஸ்டாலின் - 10,000 முகாம்கள்

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் - 10,187 கிராம ஊராட்சி, 51.13 லட்சம் பயனாளிகள்

பயிர் உற்பத்தித் திறன் - அகில இந்திய அளவில் கேழ்வரகு முதலிடம், சிறுதானியங்கள் மூன்றாம் இடம்.

364 திட்டங்கள் நிறைவேற்றம்!

தி.மு.கவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. 404 திட்டங்கள் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடம் 37 திட்டங்கள் நிலுவையில் உள்ளன. 64 திட்டங்கள் தற்போது நடவடிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படாதவை.

பள்ளிக் கல்வித்துறை!

பள்ளிக் கல்வித்துறைக்கு அறிவிக்கப்பட்ட 22 திட்டங்களில் 17 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2 திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. ஒன்றிய அரசிடம் 1 திட்டம் நிலுவையில் உள்ளது.

நெடுஞ்சாலைதுறை!

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு அறிவிக்கப்பட்ட 14 திட்டங்களில் 11 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1 திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளன.

நகராட்சி நிர்வாக துறை!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு அறிவிக்கப்பட்ட 23 திட்டங்களில் 20 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசின் ஒரு திட்டம் நிலுவையில் உள்ளன.

15 திட்டங்கள் நிறைவேற்றம்!

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைக்கு அறிவிக்கப்பட்ட 19 தொலைநோக்கு திட்டங்களில் 15 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2 திட்டங்கள் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளன.

banner

Related Stories

Related Stories