தமிழ்நாடு

”திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக நடத்தப்படும் குடமுழுக்கு விழாக்கள்” : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!

திராவிட மாடல் ஆட்சியில்தான் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

”திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக நடத்தப்படும் குடமுழுக்கு விழாக்கள்” : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அருள்மிகு கங்காதீஸ்வரர் கோவிலில் 94 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள அன்னதான கூடத்திற்கு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ”900 ஆண்டுகளுக்கு மேல் அருள்தரும் கங்காதேஸ்வரன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த திருக்கோவிலை பொறுத்தவரை இதுவரை 19 கோடி ரூபாய் அளவிற்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைக்கு நாள்தோறும் 100 பக்தர்கள் உணவு அருந்தும் வகையில் அன்னதான கூடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் அன்னதான கூடம் ரூ.94 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இந்தப் பணி 3 மாத காலத்தில் பக்தர்களுடைய பயன்பாட்டிற்கு வரும்.

திராவிட மாடல் ஆட்சியில் தான் 3,432 திருக்கோவில்களில் குடமுழுக்கு விழா எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மட்டும் 32 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது. வரும் தை மாதத்திற்குள் 4 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு எடுக்கப்படும்.

அதேபோல், ஓடாமல் இருந்த பல திருக்கோயில் திருத்தேர்கள் திமுக ஆட்சியில் தான் ஓடியது. அந்த பெருமை திமுகவையே சேரும். 18 ஆண்டுகளுக்கு மேலாக போடாமல் இருந்த சிவகங்கை மாவட்டம் கண்டம்தேவி திருக்கோயில் திருத்துறை ஓட வைத்த பெருமையும் திராவிட மாடல் ஆட்சியையே சாரும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories