தமிழ்நாடு

நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு : த.வெ.க தொண்டர் காவல்துறையில் கொடுத்த புகார் என்ன?

த.வெ.க தொண்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு : த.வெ.க தொண்டர் காவல்துறையில் கொடுத்த புகார் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்மையில் மதுரையில் த.வெ.க மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்ற விஜய், பொதுமேடைக்கு எதிர அமைக்கப்பட்டிருந்த நடைமுறையில் நடந்து சென்றார்.

அப்போது, தொண்டர்கள் பலரும் மேடைமீது ஏறி விஜய் அருகே செல்ல முயன்றபோது, கட்சி தொண்டர்கள் என்றும் பாராமல் அங்கிருந்த பவுன்சர்கள் அவர்களை தூக்கி வீசினர். தொண்டர்களை கீழே தள்ளிவிட்டனர்.

இதை கண்ட தொண்டர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். தனது தலைவர் அருகே கூட செல்ல விடாமல் ஏன் இப்படி தடுக்கிறார்கள் என்பது அங்கிருந்த எல்லோருக்கும் நிச்சயம் கோவமும் கேள்வியும் எழுந்து இருக்கும்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்குமார் என்ற தொண்டனும், விஜயை பார்க்கும் வேண்டும் என்ற ஆர்வத்தில் நடைமேடை மீது ஏறி அருகே சென்றார். அப்போது அங்கிருந்த பவுன்சர்கள் அவரை தூக்கி வீசினர். இதில் அவர் மேடையில் இருந்து கீழே விழுந்தார்.

இந்நிலையில், விஜயின் பாதுகாவலர்கள் (பவுன்சர்கள்) மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி த.வெ.க தொண்டர் சரத்குமார் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், நடிகர் விஜய் உள்ளிட்ட 10 பவுன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories