தமிழ்நாடு

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள் / பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு.

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள் / பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு.

தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக், பிற சர்வதேச அளவிலான போட்டிகளில், தேசிய, மாநில அளவில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் (PSUs) 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3% இடஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டுப் போட்டிகளில் 01.01.2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானவையாக கருதப்படும்.

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?

சர்வதேச போட்டிகளான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் (ISF) 4 ஆண்டுகளுக் ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்ல ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை, IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்கள் போட்டிகள், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப்கள் போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள், பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் (IBSA) காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகளில் வெற்றிபெற்றவர்களாகவோ அல்லது பங்கேற்றவர்களாவர்களாகவோ இருக்கவேண்டும்.

தேசிய விளையாட்டுப் போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களாக மட்டும் இருக்கவேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (SDAT) அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களாக மட்டும் இருக்கவேண்டும். குறிப்பாக போட்டிகளின் அனைத்து நிலைகளிலும், சீனியர் அளவிலான போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும்.

பொதுவான தகுதிகளாக, விளையாட்டு வீரர்கள் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து குறைந்தபட்ச கல்வித் தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.விளையாட்டு வீரர்கள் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும். பாரா-தடகள வீரர்களுக்கான வயது வரம்பு 50 வயதிற்குள் இருத்தல் வேண்டும். 3% விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வேலை பெற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டினை சார்ந்த விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் மேற்காணும் வழிகாட்டுதலின் படி 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் 25.08.2025 காலை 10.00 மணி முதல் 24.09.2025 மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

banner

Related Stories

Related Stories