தமிழ்நாடு

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 66 புதிய பள்ளிக் கட்டடங்கள் - 818 பேருக்கு பணி நியமனம் : முழு விவரம் உள்ளே!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.104.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, 818 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 66 புதிய பள்ளிக் கட்டடங்கள் - 818 பேருக்கு பணி நியமனம் : முழு விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (22.8.2025) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 104.24 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், கொட்டாம்பட்டி புதிய பேருந்து நிலையம், 66 புதிய பள்ளிக் கட்டடங்கள், 4 புதிய நூலகக் கட்டடங்கள், 49 பொது விநியோகக் கடைகள், 26 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், 25 உணவு தானிய சேமிப்பு கிடங்குகள், 45 ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்கள், 16 கிராம செயலகக் கட்டடங்கள்;

84 புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்கள், 3 சமூகநலக் கூடங்கள். மதுக்கூரில் நேரடி நெல் விற்பனை மையக் கட்டடம், 3 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கக் கட்டடங்கள், 2 மகளிர் சுய உதவிக் குழு கட்டடங்கள் மற்றும் 2 பாலங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 818 சாலை ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முக்கிய நோக்கமாகும்.

அதன்படி, ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்கல், சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி, உட்கட்டமைப்புகளான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊரகச் சந்தைகள், உணவு கிடங்குகள் போன்றவற்றை ஏற்படுத்தி, புதிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அதனை திறம்பட தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காகவும், ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் நல்ல காற்றோட்டமான அலுவலக சூழலில் பணியாற்ற ஏதுவாகவும், பழைய பழுதடைந்த கட்டடங்களுக்குப் பதிலாக புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்டும் திட்டம் 2008-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான அரசால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போதுவரை 348 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 290 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களில் ஊராட்சி ஒன்றிய பணியாளர்களுக்கேற்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி சிறந்த பணிச்சூழலை ஏற்படுத்த, இந்த புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் தரை மற்றும் முதல் தளம், முகப்பு கட்டடம், ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கு, சுய உதவிக் குழுக்களுக்கான பிரத்யேக பயிற்சி அரங்கு, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அறைகள், பொறியியல் பிரிவிற்கென தனி அறைகள், பொதுமக்களுக்கான விசாலமான பகுமுகக்கூடம், கணினி அறை, எழுதுபொருட்கள் பாதுகாப்பு அறை, கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, திருநெல்வேலி மாவட்டம் – நாங்குநேரி ஒன்றியத்தில் 3 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - தாத்தையங்கார்பேட்டை ஒன்றியத்தில் 3 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்;

மதுரை மாவட்டம் – கொட்டாம்பட்டியில் 4 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம்; ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வி மேம்பாட்டிற்காக 19 மாவட்டங்களில் 20 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 66 புதிய பள்ளிக் கட்டடங்கள்;

ஊரகப் பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்திட அரியலூர் மாவட்டம் – உட்கோட்டை, தருமபுரி மாவட்டம் – மாதேமங்கலம், வேலூர் மாவட்டம் – வளத்தூர், கடலூர் மாவட்டம் – அன்னவல்லி ஆகிய இடங்களில் 88 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 புதிய நூலகக் கட்டடங்கள்;

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 66 புதிய பள்ளிக் கட்டடங்கள் - 818 பேருக்கு பணி நியமனம் : முழு விவரம் உள்ளே!

ஏழை மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக 11 மாவட்டங்களில் 5 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 49 பொது விநியோகக் கடைகள்; ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் சுகாதாரத்தினை மேம்படுத்தும் விதமாக 13 மாவட்டங்களில் 18 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 26 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள்;

ஊரகப் பகுதிகளில் விளையும் விளைபொருட்களை சேமித்து எளிமையாக சந்தைப்படுத்திட 11 மாவட்டங்களில் 3 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 25 உணவு தானிய சேமிப்பு கிடங்குகள்;

ஊராட்சிமன்ற செயல்பாட்டினை மேம்படுத்திட 12 மாவட்டங்களில் 13 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 45 ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்கள்;

ஊராட்சிமன்றம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் இரண்டினையும் ஒருங்கிணைத்து ஓரிடத்தில் மக்கள் அரசு பயன்களை பெற்றிட 6 மாவட்டங்களில் 6 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 கிராம செயலகக் கட்டடங்கள்;

சிறுகுழந்தைகள் நலம் பேணிட 19 மாவட்டங்களில் 12 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 84 புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்கள்; ஊரகப் பகுதிகளில் வாழும் மக்கள் தங்களின் குடும்ப நிகழ்வுகளை நடத்திட தேனி மாவட்டம் – அம்மச்சியாபுரம், கடலூர் மாவட்டம் – அன்னவல்லி, தூத்துக்குடி மாவட்டம் – கூட்டுடன்காடு ஆகிய இடங்களில் 1 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 சமூகநலக் கூடங்கள்;

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியத்தில் 35 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நேரடி நெல் விற்பனை மையக் கட்டடம்; பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் பாலினை விற்பனை செய்திட விழுப்புரம் மாவட்டம் - கண்டம்பாக்கம் மற்றும் சகாதேவன்பேட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – சனமங்கலம் ஆகிய இடங்களில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கக் கட்டடங்கள்;

செங்கல்பட்டு மாவட்டம் – ஊரப்பாக்கம் மற்றும் சேலம் மாவட்டம் – டேனிஷ்பேட்டை ஆகிய இடங்களில் 1 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 மகளிர் சுய உதவிக் குழு கட்டடங்கள்;

ஊரகப் பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்தும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டம் – பெருகோபனப் பள்ளி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் – அயக்கோடு ஆகிய இடங்களில் ஆறுகளின் குறுக்கே 6 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு பாலங்கள்;

என மொத்தம் 104 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் திட்டக் கண்காணிப்பு பணிகளை திறம்பட மேற்கொள்ள, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 818 சாலை ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

banner

Related Stories

Related Stories