தமிழ்நாடு

மக்கள் நல்வாழ்வுத் துறையில் 644 பேருக்கு பணி நியமனம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 644 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணி நியமன ஆணைகள் வழங்கினார்.

மக்கள் நல்வாழ்வுத் துறையில் 644 பேருக்கு பணி நியமனம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (22.8.2025) சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 182 உதவி மருத்துவ அலுவலர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பல் மருத்துவர்கள்;

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 324 அறுவை அரங்கு உதவியாளர்கள், தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து துறைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு திறன்மிகு உதவியாளர் நிலை-2 (பற்றவைப்பவர்) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 18 உளவியல் உதவி பேராசிரியர்கள்;

மருத்துவ உளவியலாளர்கள், மருந்து கட்டுப்பாடு இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 17 மருந்துகள் ஆய்வாளர்கள், குடும்ப நல இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 54 வட்டார சுகாதார புள்ளியிலாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 644 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நவீன மருத்துவக் கருவிகளை நிறுவுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் நலவாழ்வு பெறவேண்டும் என்கிற உயரிய நோக்கில் அவர்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளித்திடும் “மக்களைத் தேடி மருத்துவம்”;

மக்கள் நல்வாழ்வுத் துறையில் 644 பேருக்கு பணி நியமனம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் “இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும்-48”, சிறப்பு மருத்துவ சேவைகளை மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கே கொண்டு செல்லும் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, மருத்துவத் துறையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 4,576 உதவி மருத்துவர்கள், 27 மாற்றுத்திறனாளி செவிலியர்கள், 2,772 இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளடக்கிய 7,375 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 555 உதவியாளர் பணியிடங்கள், 584 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 187 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் 314 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பணியிடங்கள் நிரப்பப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 182 உதவி மருத்துவ அலுவலர்கள் (பொது), மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பல் மருத்துவர்கள், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 324 அறுவை அரங்கு உதவியாளர்கள் மற்றும் தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து துறைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு திறன்மிகு உதவியாளர் நிலை-1 என மொத்தம் 555 நபர்கள்;

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 18 உளவியல் உதவி பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ உளவியலாளர்கள், மருந்து கட்டுப்பாடு இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 17 மருந்துகள் ஆய்வாளர்கள், குடும்ப நல இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 54 வட்டார சுகாதார புள்ளியிலாளர்கள், ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 89 நபர்கள்;

என மொத்தம் 644 நபர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

banner

Related Stories

Related Stories