தமிழ்நாடு

மின்சார வாகன விற்பனையை ஊக்குவிக்க திட்டம் என்ன? : ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய திமுக MP!

மின்சார வாகன விற்பனையை ஊக்குவிக்க திட்டம் என்ன? என திமுக எம்.பி ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மின்சார வாகன விற்பனையை ஊக்குவிக்க திட்டம் என்ன? : ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய திமுக MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மின்சார வாகனங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் அதன் விற்பனையை ஊக்குவிக்கவும் ஒன்றிய அரசின் திட்டங்கள் மற்றும் இலக்கு குறித்து பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வகை வாகனங்களுக்கு ஆண்டொன்றிற்கு தேவைப்படும் சுமார் 400 ஜிகாவாட் மணிநேரம் (GWh) பேட்டரி திறன் உற்பத்திக்கு அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன? பேட்டரி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய கனிமமான லித்தியத்தின் தேவை உலகளாவிய அளவில் அதிகரித்து வருகிறது. அதை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மேம்பட்ட அமைப்பில் உள்நாட்டில் பேட்டரி ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க அரசின் திட்டங்கள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.

இலக்கை அடைகிறதா மஞ்சள், ஜமக்காள ஏற்றுமதி?

2019-20 முதல் 2024-25 வரை ஒவ்வொரு ஆண்டும் ஈரோட்டில் இருந்து மஞ்சள் மற்றும் பவானியில் இருந்து கம்பளங்கள் ஏற்றுமதி செய்த விவரங்கள் கேட்டு ஈரோடு திமுக மக்களவை உறுப்பினர் பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கூறிய ஒவ்வொரு தயாரிப்பு வகைகளுக்கும் அதன் ஏற்றுமதி அளவு டன்களிலும் அதன் மதிப்பு கோடியிலும் வெளியிட வேண்டும், இந்த தயாரிப்புகளுக்கு 2025-26 ஆம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதி இலக்குகள் மற்றும் அவற்றை அடைய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? சர்வதேச சந்தைகளில் இந்த ஜிஐ-டேக் செய்யப்பட்ட தயாரிப்புகளை ஊக்குவிக்க அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட குறிப்பிட்ட முயற்சிகள் யாவை என்றும் அவர் கேட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories