தமிழ்நாடு

”ஆதாரை ஏற்கத் தடுப்பது எது?” : தலைமை தேர்தல் ஆணையருக்கு 7 கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தலைமை தேர்தல் ஆணையருக்கு 7 கேள்விகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.

”ஆதாரை ஏற்கத் தடுப்பது எது?” :  தலைமை தேர்தல் ஆணையருக்கு 7 கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு ஆதரவாக இந்த நீக்கம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது என கூறி 7 கேள்விகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

1.வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?

2.புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?

3.Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?

4.பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா?

5.01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?

6.வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?

7.“நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் - வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?

banner

Related Stories

Related Stories