அரசியல்

முகவரி இல்லாதவர்களை வாக்காளர்களாக சேர்த்தது ஏன்? - தேர்தல் ஆணையர் விளக்கம் !

முகவரி இல்லாதவர்களை வாக்காளர்களாக சேர்த்தது ஏன்? - தேர்தல் ஆணையர் விளக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு ஆதரவாக இந்த நீக்கம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாகியுள்ளது.

முகவரி இல்லாதவர்களை வாக்காளர்களாக சேர்த்தது ஏன்? - தேர்தல் ஆணையர் விளக்கம் !

இந்த நிலையில், புதுடெல்லியில் இன்று தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்திஆகியோர் யாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்கள், "அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் உறுதியாக நிற்கிறது.

தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எங்களுக்கு எல்லா கட்சிகளும் ஒன்றுதான். வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான புகார்கள் மீது விசாரணை தேவை இல்லை. வாக்குத் திருட்டு போன்ற சொற்கள் அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும். எனவே சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடரும்.

வாக்குப்பதிவு குறித்த சி.சி.டி.வி காட்சிகளை வழங்குவது வாக்காளர்களின் தனி உரிமைக்கு எதிரானது. இதனால் அதனை வழங்கமாட்டோம். நாட்டில் பலருக்கும் தங்குவதற்கு வீடு இல்லை. இரவில் சாலையோரம், மேம்பாலத்துக்கு கீழே உறங்குவார்கள். ஆனால், அவர்கள் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளது"என்று விளக்கமளித்தனர்.

banner

Related Stories

Related Stories