தமிழ்நாடு

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் காலமானார்!

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் காலமானார்.

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் காலமானார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தஞ்சாவூரை சேர்ந்த இல.கணேசன் 1945-ல் பிறந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், தனது அண்ணன்கள் வழியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்தார். 16 வயதிலேயே அரசு ஊழியராகிவிட்டார் என்றாலும், ஆர்.எஸ்.எஸ். பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்-ல் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த இவர், பின்னர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து 1991-ல் பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினரான கணேசன், சீக்கிரமாகவே மாநில அமைப்புச் செயலாளர் ஆனார். பாஜக செயற்குழு உறுப்பினராக பல ஆண்டுகளாக இருந்த கணேசன், இடையில் தேசியச் செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலத் தலைவர் பதவிகளிலும் இருந்தார்.

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினரானார் கணேசன். எம்.பி. பதவியைத் தொடர்ந்து மணிப்பூர் ஆளுநராக இருந்த இவர், பின்னர் நாகாலாந்து ஆளுநராக்கப்பட்டார்.

இந்த சூழலில் அண்மையில் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை காலமானார். இல.கணேசன் (80) மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories