தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்கு மானியத் தொகை வழங்குவதில் தாமதம் ஏன்? : ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய தரணிவேந்தன் MP!

தமிழ்நாட்டிற்கு மானியத் தொகை வழங்குவதில் தாமதம் ஏன்? என ஒன்றிய அரசுக்கு திமுக MP தரணிவேந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு மானியத் தொகை வழங்குவதில் தாமதம் ஏன்? : ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய தரணிவேந்தன் MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் விவசாய உரங்களுக்கான நேரடி பயனாளி திட்டத்தில்(DBT) பயன்பெறுபவர்கள் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் தரணி வேந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் DBT இன் கீழ் விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்ட மானியத் தொகையில் உள்ள வேறுபாடுகள், தகுதியுள்ள விவசாயிகளுக்கு மானியங்களை சரியான நேரத்தில் மற்றும் வெளிப்படையாக கிடைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் மற்றும் தமிழ்நாட்டில் போதிய அளவு பயன்பாட்டுக்கு உரங்கள் வழங்கப்படாதது குறித்தும் அவர் நாடாளுமன்றத்தில் கேட்டுள்ளார்.

உயிர்காக்கும் மருந்துகளின்றி தவிக்கும் நோயாளிகள் சுகாதார துறையில் அலட்சியம் காட்டும் ஒன்றிய அரசு!

ஒன்றிய அரசின் சுகாதார திட்டத்தின் பயனாளிகளுக்கு சிறப்பு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் உயிர்காக்கும் மருந்துகளும் அறுவை சிகிச்சைக்குப் பின் தேவைப்படும் மருந்துகளும் மறுக்கப்படுவது குறித்து திமுக மக்களவை உறுப்பினர்கள் அ. மணி, ஜி.செல்வம் மற்றும் சி.என்.அண்ணாதுரை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலே குறிப்பிட்ட மருந்துகள் சுகாதார திட்டத்தின் பட்டியலில் சேர்க்கப்படாததே காரணம் என்றும் குறைந்தபட்சம் அத்தகைய மருந்துகளை வெளிச் சந்தையில் வாங்குபவர்களுக்கு அதற்குரிய பணம் வழங்கும் நடைமுறையை ஏற்படுத்தாது ஏன் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.

நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மறுக்கும்போது அதற்கான காரணத்தை தலைமை மருத்துவ அதிகாரி (CMO) எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories