இந்தியா

ஜி-7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் அழைக்கப்பட்டது உண்மையா? : மக்களவையில் திமுக MP கணபதி ராஜ்குமார் கேள்வி!

ஜி-7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் உண்மையில் அழைக்கப்பட்டாரா? என மக்களவையில் திமுக MP கணபதி ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜி-7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர்  அழைக்கப்பட்டது உண்மையா? : மக்களவையில் திமுக MP கணபதி ராஜ்குமார் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜி-7 நாடுகள் அமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லாதபோதும் இந்திய பிரதமர் ஜூன் 15 முதல் 17, 2025 வரை கனடாவால் நடத்தப்பட்ட 51வது ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பிரதமர் அழைக்கப்பட்டார் என்கிற செய்தி உண்மையா என நாடாளுமன்றத்தில் கோவை மக்களவை தொகுதி திமுக உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விசயங்கள் குறித்து செய்தி வெளியிடாதது ஏன் என்று கேட்டிருக்கும் அவர், அம்மாநாட்டில் இந்திய பிரதமர் ஜி-7 நாடுகளுடன் நடத்திய தனிப்பட்ட இருதரப்பு சந்திப்பு குறித்தும் கேட்டுள்ளார்.

சிறுநீரக நோயாளிகளுக்கான டயாலிசிஸ் வசதிகள் கூடுதல் மையங்களை உருவாக்க கோரிக்கை!

நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதற்கு கவலை தெரிவித்து அவர்களுக்கான சிகிச்சைகள் குறித்து திமுக மக்களவை உறுப்பினர்கள் ஜி. செல்வம் மற்றும் சி. என். அண்ணாதுரை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளனர்.

நீரிழிவு நோயாளிகளில் பலருக்கு சிறுநீரகம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக டயாலிசிஸ் தேவைப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் தற்போது கிடைக்கும் சிறுநீரகவியல் சிகிச்சைகளில் போதாமை உள்ளது. அதனால் தமிழ்நாட்டில் கூடுதல் டயாலிசிஸ் மையங்களை நிறுவ வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் டயாலிசிஸ் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பிரதமர் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட/விடுவிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதியின் அளவு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories