தமிழ்நாடு

”கலைஞரின் ஒளியில் வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞரின் ஒளியில் வெற்றிப்பாதையில் நடைபோடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”கலைஞரின் ஒளியில் வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழறிஞர் கலைஞரின் 7 ஆம் ஆண்டு நினைவுநாள் தமிழ்நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா சாலையில் இருந்து கலைஞர் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் “கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்” மற்றும் கலைஞர் நிதிநல்கை திட்டத்தைத் தொடங்கி வைத்து, முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் 8 புதிய நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார்.

”கலைஞரின் ஒளியில் வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னதாக சமூகவலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”தலைவர் கலைஞர் -முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு! தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!

அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்" என புகழஞ்சலி சூட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories