முரசொலி தலையங்கம்

வெட்கமில்லாமல் அறிக்கை விடும் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2011 முதல் 2021 வரைக்கும் தரை மட்டத்துக்கு இறக்கியது அ.தி.மு.க. ஆட்சிதான்.

வெட்கமில்லாமல் அறிக்கை விடும் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (26-02-2026)

புதைகுழியில் அல்ல; இமயத்துக்கு!

தமிழ்நாட்டை புதைகுழிக்குள் தள்ளி விட்டது தி.மு.க. அரசு என்று புலம்பி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. புதைகுழியில் அல்ல; இமயத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது தமிழ்நாடு என்பதை பல்வேறு புள்ளி விபரங்கள் மூலமாக மெய்ப்- பிக்க முடியும். இந்தப் புள்ளி விபரங்கள், கணிப்புகள் அனைத்தும் ஒன்றிய அரசின் அறிக்கைகள் தானே தவிர, நமது அறிக்கைகள் அல்ல.

தமிழ்நாடு அரசின் அறிக்கைகள் அல்ல; இன்னும் சொன்னால் தமிழ்நாட்டில் உருவான அறிக்கைகள் அல்ல. டெல்லியில் உருவான அறிக்கைகள். அதிலும் குறிப்பாக ஒன்றிய அரசின் அறிக்கைகள். இது எதையும் படிக்க மாட்டேன், பார்க்க மாட்டேன், அதை யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டுதான் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார் பழனிசாமி.

தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் புதைகுழிக்குத் தள்ளியவர் பழனிசாமிதான். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2011 முதல் 2021 வரைக்கும் தரை மட்டத்துக்கு இறக்கியது அ.தி.மு.க. ஆட்சிதான்.

2021 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு வெள்ளை அறிக்கையை அரசு தாக்கல் செய்தது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை எந்தெந்த வகையில் எல்லாம் சீரழித்தது என்பது அதில் உள்ளது .

அந்த அறிக்கையில், "2011-12 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார நிலைமை உச்சநிலையில் இருந்தது. அது கடந்த (2012–21) பத்தாண்டு காலத்தில் மந்த நிலைமையை அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக 2013 - 14 - ஆண்டில் இருந்து தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது. இப்படி நெருக்கடியில் இருந்த நிலையை கொரோனா என்ற பெருந்தொற்றுப் பரவல் கூடுதலாகப் பாதித்துவிட்டது. 2906-13 காலக்கட்டத்தில் ஏழு ஆண்டுகளில் 5 ஆண்டுகள் தமிழ்நாடு அரசு உபரி வருவாயை அடைந்திருந்தது. 2013 முதல் பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது. 2017- 19 காலக்கட்டத்தில் இந்தியாவிலேயே அதிகளவு வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு ஆக்கப்பட்டு விட்டது”என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்குப் பழனிசாமியின் பதில் என்ன?

2016- 21 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிதிப்பற்றாக் குறையில் வருவாய் பற்றாக்குறை விகிதம் என்பது 52.48 சதவிகிதம் ஆகும். இது முந்தைய ஆட்சியில் 2011 ஆம் ஆண்டில் 14.95 சதவிகிதமாக இருந்தது. அ.தி.மு.க. ஆட்சியின் உண்மையான செலவுகள் கட்டுப்படுத்தப்படவில்லை. பற்றாக்குறைகள் மறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இன்றைய கடன் என்பது 5,70,189 கோடி ரூபாய் ஆக இருக்கிறது. 2018 இல் 16.68 சதவிகிதமாக இருந்த கடனை 2011 இல் - தி.மு.க. ஆட்சியில் - 15.36 சதவிகிதமாக குறைத்தோம். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அது 25 சதவிகிதம் ஆகிவிட்டது” என்று அந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கெல்லாம் பழனிசாமியின் பதில்என்ன?

தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக புதைகுழிக்குத் தள்ளியவர் பழனிசாமியே! இத்தகைய சூழலில் ஆட்சிக்கு வந்து, தமிழ்நாட்டை இமயத்துக்கு உயர்த்தியதுதான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின்ாதனை.

கடந்த நிதியாண்டில் 11.19 விழுக்காடு என்ற உயரிய பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எட்டி இருக்கிறது என்பதுதான் ‘திராவிட மாடல்' ஆட்சியின் மகத்தான சாதனையாகும். மகுடம் என்று சொல்லத்தக்க சாதனை ஆகும். கடந்த 14 ஆண்டுகளில் தமிழ்நாடு இத்தகைய வளர்ச்சியை அடைவது இதுவே முதல்முறை. இந்தியாவில் எந்த மாநிலமும் இத்தகைய வளர்ச்சியைப் பெறவில்லை.

ஒன்றிய அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2024-25 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் வளர்ச்சி புள்ளிவிவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதில்தான் இது இருக்கிறது.

வெட்கமில்லாமல் அறிக்கை விடும் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!

இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது 2024 -25 ஆகிய ஆண்டில் 6.5 விழுக்காடாக இருக்கிறது. தற்போது தமிழ்நாடு 11.19 விழுக்காடாக உயர்ந்து விட்டது. இதுதான் தமிழ்நாட்டின் வெற்றியாகும். இதைச் சொல்வது ஒன்றிய அரசுதான். நாம் அல்ல. இதைக் கூடத் தெரிந்து கொள்ளும் திறன் இல்லாத பழனிசாமி, நான்காண்டு காலம் அந்தப் பதவியில் எப்படி உட்கார்ந்து இருந்தார்?

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு தமிழ்நாடு 9.4 விழுக்காடு பங்களிப்பைச் செலுத்துகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியானது இந்த ஆண்டு மட்டும் 31.19 லட்சம் கோடி ஆகிவிட்டது. தொழில் துறையில் தமிழ்நாடு 14.75 விழுக்காடு வளர்ச்சியை அடைந்துள்ளது. சேவைத் துறையானது 11.3 விழுக்காடு வளர்ச்சியை எட்டி இருக்கிறது.

அந்நிய நேரடிமுதலீட்டை ஈர்க்கும் இந்திய முதன்மை மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. மின்னணு சாதனங்கள், துணிகள், தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

பொறியியல் இயந்திர ஏற்றுமதியில் இரண்டாமிடம் வகிக்கிறது. ஏற்றுமதி ஆயத்த நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது. வணிகப் பொருட்கள் ஏற்றுமதி இரண்டு மடங்கு ஆகி இருக்கிறது. கேழ்வரகு, கரும்பு விளைச்சலில் முதலிடத்தையும் எண்ணெய் வித்துகளில் இரண்டாம் இடத்தையும், நிலக்கடலை விளைச்சலில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருக்கிறது. கல்வியிலும் சுகாதாரத்திலும் முன்னணி மாநிலமாக இருக்கிறது. இது தொடர்பான புள்ளிவிபரங்களை பழனிசாமி வாங்கிப் பார்த்துக் கொள்ளலாம்.

கடைசி இடத்துக்கு தமிழ்நாட்டை தள்ளியவர் பழனிசாமி. முதலிடம் உயர்த்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பழனிசாமி வெட்கமில்லாமல் எப்படி அறிக்கை விடுகிறார் எனத் தெரியவில்லை.

banner

Related Stories

Related Stories