தமிழ்நாடு

நலம் காக்கும் ஸ்டாலின்: பொதுமக்களின் பேட்டிகள் முதலமைச்சருக்கு கிடைத்த நற்சாட்சிப் பத்திரங்கள் - முரசொலி!

அனைவரையும் நலமுடன் வாழ வைப்பதிலும் தமிழ்நாடு முன் மாதிரி மாநிலமாக முன்னேறி வருவதை உறுதி செய்துள்ளார் நல் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின்

நலம் காக்கும் ஸ்டாலின்: பொதுமக்களின் பேட்டிகள் முதலமைச்சருக்கு கிடைத்த நற்சாட்சிப் பத்திரங்கள் - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (04-08-2025)

நலம் காக்கும் நல் முதலமைச்சர்

தமிழ்நாட்டின் அனைத்து மக்களின் நலம் காக்கும் நல் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அனைத்துத் துறைகளும் தங்களது துறையின் சார்பில் பல்வேறு மகத்தான திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. இவை அனைத்தும் சேர்ந்து தமிழ்நாட்டை உன்னதமான இடத்துக்கு உயர்த்தி வருகிறது. அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் பங்கு மிகமிக முக்கியமானது ஆகும்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி, அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்தது இந்தத் துறையின் மகத்தான சாதனை ஆகும். மக்களைத் தேடி மருத்துவம் –- இன்னுயிர் காப்போம் – -நம்மைக் காக்கும் 48 – - பாதம் பாதுகாப்போம் -– இதயம் காப்போம் – - சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டம் - – மக்களைத் தேடி ஆய்வக சேவைகள் - – நடப்போம் -நலம் பெறுவோம் திட்டம், வணிகர்களைத் தேடி மருத்துவத் திட்டம் –- தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் - – முதல்வர் மருந்தகம் என்ற வரிசையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற மருத்துவ முகாம்களை இத்துறை தொடங்கி இருக்கிறது. இதனை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் நேற்று முன்தினம் (02.08.2025) தொடங்கி வைத்துள்ளார்கள்.

நலம் காக்கும் ஸ்டாலின்: பொதுமக்களின் பேட்டிகள் முதலமைச்சருக்கு கிடைத்த நற்சாட்சிப் பத்திரங்கள் - முரசொலி!

38 மாவட்டங்களில் 1,256 முகாம்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் ஊரகப் பகுதிகளில் நடைபெறுகிறது. சமூகப் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களது நன்மைக்காக இவை அமைக்கப்பட்டுள்ளன. E.C.G, எக்கோ, X-–Ray, ஸ்கேன், காசநோய் மற்றும் தொழுநோய் பரிசோதனைகள், பெண்களுக்கான கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட இருக்கிறது. இது தொடர்பான மருத்துவ அறிக்கை, அனைவருக்கும் தரப்பட இருக்கிறது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி மட்டும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரம் பேர் இந்த முகாமுக்கு வந்து பயனடைந்திருக்கிறார்கள்.

இந்த முகாமில் பயனடைந்த மக்கள் ஊடகங்களில் அளித்து வரும் பேட்டிகள், இதன் பயன்பாட்டை உறுதி செய்துள்ளது.

பெண்கள், ஏழை எளியோர், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் என அனைவரும் மகிழ்ச்சி மனநிலையோடு பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். “வரும் போது அனாதை போல வந்தேன். இப்ப திருப்தியோடு போறேன். பொதுவா ஒரு இடத்துக்கு போனா, ‘அந்தப் பக்கமா போங்க’ என்று சொல்லி விடுவார்கள். ஆனா இங்க வந்ததும் ஒவ்வொரு இடத்துக்கா கூட்டிட்டு போனாங்க. கண் பரிசோதனை செய்தேன். முதலமைச்சரையும் பார்த்தேன். கை கொடுத்து பேசிட்டு இருந்தாரு. இதெல்லாம் எனக்கு கிடைச்சிருக்கு... சந்தோஷமா வீட்டுக்கு போறேன்” என்கிறார் மயிலாப்பூரைச் சேர்ந்த கவுசியம்.

*சென்னை கிண்டியைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர், “மெரினா கடற்கரை மணல் பரப்பு சிறுகடை வியாபாரிகள் சங்க உறுப்பினராக நான் இருக்கிறேன். இந்த முகாம் சிறப்பாக உள்ளது. அனைத்துப் பரிசோதனைகளையும் சிறப்பாக செய்தார்கள். கண், பல், ரத்தப் பரிசோதனை செய்தனர். அனைத்து சோதனையும் ஒரே இடத்தில் செய்தனர். அனைத்து மருத்துவர்களும் ஒரே இடத்தில் இருந்தனர். இந்த முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என்று சொல்லி இருக்கிறார்.

*கொளத்தூரைச் சேர்ந்த கணேஷ் பாபு, “ திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாக உள்ளது, ஒரு மணி நேரத்தில் அனைத்து சோதனைகளும் முடிந்துவிட்டது, வெளியே சென்று இந்தச் சோதனைகளை செய்தால் பல ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆனால் இலவசமாக இன்று பரிசோதனை செய்தோம்” என்று சொல்லி இருக்கிறார்.

நலம் காக்கும் ஸ்டாலின்: பொதுமக்களின் பேட்டிகள் முதலமைச்சருக்கு கிடைத்த நற்சாட்சிப் பத்திரங்கள் - முரசொலி!

*சாந்தோமைச் சேர்ந்த ராதா என்பவர், “எங்களைப் போன்ற நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என்றார்.

*மயிலாப்பூரைச் சேர்ந்த சொர்ணாம்பிகா, “நான் கர்ப்பமாக உள்ளேன். ரத்தப் பரிசோதனை செய்தேன். செலவில்லாமல் மிக விரைவாக பரிசோதனை செய்து கொண்டேன்” என்கிறார்.

*மயிலாப்பூரைச் சேர்ந்த பவுசியா பேபி, “ பத்து பைசா செலவு இல்லாமல் எனக்கு பரிசோதனை செய்தனர். ரத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை எடுத்தனர். அனைத்தும் நன்றாக உள்ளது, இந்தத் திட்டம் செயல்படுத்தியது எங்களைப் போன்றவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது. என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆளில்லை. ஆனால் இங்கு சிறப்பாக கவனித்தார்கள்” என்று சொல்கிறார்.

*“எனக்கு இன்று செய்த பரிசோதனைகளை வெளியே சென்று செய்தால் 4000 ஆயிரம் ரூபாய் ஆகும். ஆனால் இங்கு அனைத்தும் இலவசம்” என்கிறார் ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த யாஸ்மின்.

இவைதான் முதலமைச்சருக்கு கிடைத்துள்ள நற்சாட்சிப் பத்திரங்கள் ஆகும்.

“என்னைப் பொறுத்தவரைக்கும், ஒரு திட்டத்தை கொண்டுவருகிறோம் என்றால், அது ஒவ்வொரு தனிமனிதரையும் சென்றடைய வேண்டும். ஒரே ஒருவர் கூட விடுபட்டுவிடக் கூடாது. அதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். அதனால்தான் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற திட்டங்கள் மூலமாக, ஒவ்வொருவரின் தேவையையும் புரிந்து கொண்டு அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறோம்” என்று மாண்புமிகு முதல்வர் சொன்னதையும் – மக்கள் அளித்து வரும் பேட்டிகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதை நடைமுறைப்படுத்தும் முதலமைச்சராக மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வருவதை உணரலாம்.

உயர்தரமான மருத்துவச் சேவைகளை வழங்குவதில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக விளங்கி வருகிறது. அனைவரையும் நலமுடன் வாழ வைப்பதிலும் தமிழ்நாடு முன் மாதிரி மாநிலமாக முன்னேறி வருவதை உறுதி செய்துள்ளார் நல் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

banner

Related Stories

Related Stories