தமிழ்நாடு

"கலைஞரின் திட்டங்களே தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்புக்கு காரணம்": - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !

"கலைஞரின் திட்டங்களே தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்புக்கு காரணம்": - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நூற்றாண்டு தொடக்க விழா,2025ஆம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது,நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு செவிலியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கடந்த ஒரு வாரமாக முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். நான் தமிழ்நாட்டிற்கு எந்த இடத்திற்கு சென்றாலும், முதலமைச்சர் எப்படி இருக்கிறார் தலைவர் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தார்கள். எல்லோரிடமும் நான் நம்பிக்கையாக சொன்னேன். இரண்டு மூன்று நாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார் என்று.

நேற்று நலமாக முதலமைச்சர் வீடு திரும்பியுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள்., செவிலியர்களுக்கு இந்த மேடையில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீதிக்கட்சி நிறைவேற்றிய சட்டம் தான் சட்டபூர்வமாக செவிலியர்களுக்கு ஒழுங்கு முறையை வழங்கியது. இந்த கவுன்சில் தான் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட செவிலியருக்கான முதல் கவுன்சில்.இந்த செவிலியர் கவுன்சில் தான் நூற்றாண்டு கண்ட உலகில் மூன்றாவது செவிலியர் அமைப்பு.

"கலைஞரின் திட்டங்களே தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்புக்கு காரணம்": - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !

இந்த செவிலியர் அமைப்பால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெருமை. நோய்கள் பரவாமல் இருக்க தடுப்பூசிகள் மிக மிக அவசியம், அப்படி தடுப்பூசி போடச் சொல்லிட்ட மருத்துவர்களையும் செவிலியர்களையும் மக்கள் துரத்திய காலம் ஒன்று இருந்தது, ஆனால் அவர்களுக்கும் புரிய வைத்து தடுப்பூசி போட வைத்த பெருமை செவிலியர் சமூகத்திற்கு உண்டு.

திராவிட இயக்கமும் அப்படித்தான் – சமூகத்தை பிடித்த நோய்களை தீர்ப்பதற்காக., பெரியார், அண்ணா,.கலைஞர், பகுத்தறிவு கருத்துக்களை ஊர் ஊராக சென்று சொன்னார்கள். ஆரம்பத்தில் அவர்களை தடுத்தார்கள், தாக்கினார்கள். ஆனால் அது எல்லாம் பொறுத்துக் கொண்டு தொண்டாற்றிய காரணத்தால் தான் இந்த சமூகம் முன்னேறி இருக்கின்றது.

"கலைஞரின் திட்டங்களே தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்புக்கு காரணம்": - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !

இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான செவிலியர்கள் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளதற்கு காரணம் திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களும், உருவாக்கப்பட்ட சுகாதார கட்டமைப்புகளுமே காரணம். முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களான கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் ஆகியவையே தமிழ்நாட்டில் கிராமப்புற சுகாதார கட்டமைப்பு சிறப்பாக இருக்க காரணம்.

கோபாலபுரத்தில் கலைஞர் அவர்களின் சொந்த வீடு இந்தியாவின் அரசியல் நிகழ்வுகளை தீர்மானம் செய்த இடம். அந்த வீட்டை தன்னுடைய காலத்திற்கு பிறகு, மருத்துவமனையாக்க வேண்டுமென்று எழுதிக் கொடுத்திருக்கிறார். அதேபோல அவர் வழியில் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் தமிழக சுகாதாரத்துறை மூலம் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தந்திருக்கின்றார்,இந்த திராவிட மாடல் அரசு என்றைக்கும் செவிலியர்களுக்கு பக்க பலமாக நிற்கும். 100 ஆண்டுகள் காணும் இந்த துறை இன்னும் பல நூறு ஆண்டுகள் மக்கள் சேவையாற்றி வெற்றி காண வேண்டும்"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories