தமிழ்நாடு

“PET Period-அ எந்த டீச்சர்ஸும் கடனா வாங்காதீங்க.. வேண்டுமென்றால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி கலகல!

மாணவர்களாகிய உங்கள் கனவுக்கு உங்கள் குடும்பத்தில் ஒருவனாக அண்ணனாக உங்களது அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்பேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

“PET Period-அ எந்த டீச்சர்ஸும் கடனா வாங்காதீங்க.. வேண்டுமென்றால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி கலகல!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற சர்வதேச / தேசிய / மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

“PET Period-அ எந்த டீச்சர்ஸும் கடனா வாங்காதீங்க.. வேண்டுமென்றால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி கலகல!

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது :-

பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டுவது மிகவும் முக்கியமான ஒன்று. இதைத் தொடர்ந்து செய்யும் பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுக்கள். தமிழ்நாட்டில் உள்ள இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண இது போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் கை கொடுக்கிறது.

Confidance, co-operation, Team work, Friendship, statergy, planning, excution உள்ளிட்ட அனைத்து குணங்களும் விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது. பாட புத்தகத்தின் மூலம் இவற்றையெல்லாம் கற்றுக் கொள்ள முடியாது.

கல்வியில் கவனம் செலுத்துவதும் அதே நேரத்தில் விளையாட்டிலும் கவனத்தை மாணவர்கள் கவனத்தை செலுத்த வேண்டும். விளையாட்டு பொறுத்தவரை வெற்றி எவ்வளவு முக்கியமோ அதேபோன்று விடாமுயற்சியும் மிகவும் முக்கியமான ஒன்று. வெற்றிகள் மட்டுமே வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பது இல்லை சில சமயங்களில் விடாமுயற்சியும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்,எந்த சூழலிலும் விடாமுயற்சியை கைவிட வேண்டாம். உங்களின் குடும்பத்தில் ஒருவனாக அண்ணனாக உங்களது அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்பேன்.

“PET Period-அ எந்த டீச்சர்ஸும் கடனா வாங்காதீங்க.. வேண்டுமென்றால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி கலகல!

ஒலிம்பிக் என்றாலே 1992ல் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் டெரிக் ரெட்மென்ட் செய்த செயல் தான் அனைவரின் விடா முயற்சிக்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

அப்போது ஓட்டப்பந்தயத்தில் அவர் வெற்றி பெறவில்லை. தசைப்பிடிப்பு ஏற்பட்டாலும் அவரும் அவர் தந்தையும் சேர்ந்து அந்த ஓட்டப்பந்தயத்தை நிறைவு செய்தார்கள்.

எனவே நாம் வெற்றி பெற்று தான் உலகத்திற்கு நிரூபிக்க வேண்டும் என்பது அல்ல, விடா முயற்சி உடன் முழுமையாக முயற்சி செய்தாலே வெற்றி தான் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மாணவர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் சென்று விளையாடுபவர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை என்றும் துணை நிற்கும். இதற்காக tamilnadu champions.sdat.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து உதவிகளை நாடலாம். இந்த இணையதளம் வாயிலாக மாணவர்களுக்கு தேவையான உதவிகள் உடனுக்குடன் வழங்கப்படும்.

“PET Period-அ எந்த டீச்சர்ஸும் கடனா வாங்காதீங்க.. வேண்டுமென்றால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி கலகல!

இந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விண்ணப்ப பதிவு துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் கிட்டத்தட்ட 36 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

மாணவர்கள் சார்பாக ஆசிரியர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். உடற்கல்வி வகுப்பை (PET Period) எந்த ஆசிரியரும் கடன் வாங்காதீர்கள். வேண்டுமென்றால் உங்கள் வகுப்பை வேண்டுமானால் PET Period-க்கு கடனாக கொடுங்கள். ஏனெனில் PET Period ஒவ்வொரு மாணவரின் உரிமை.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

தலைவர் மு க ஸ்டாலின் கூறியது போன்று பிரதமர் மோடியும் அமித்ஷாவும் அடிக்கடி தமிழ்நாட்டிற்க்கு வரவேண்டும் அது எங்களுக்கு வெற்றியையே தரும். முதல்வர் நலமுடன் உள்ளார். மூன்று நாட்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அதுக்கான அறிக்கைகளை வெளியிடுவர். விரைவில் அவர் குணமடைந்து வருவார்.

banner

Related Stories

Related Stories