அமைச்சர் எ.வ.வேலு , இன்று (21.7.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் பயன்படுத்தும் வகையில், தமிழ்நாடு பொதுப்பணித்துறையால் தயாரிக்கப்பட்ட 2025-26 ஆம் ஆண்டிற்கான செந்தர விலைப் பட்டியலினை வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் பயன்படுத்தும் வகையில், 2025-26ஆம் ஆண்டிற்கான செந்தர விலைப் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசால் கீழ்கண்ட அலுவலர்களைக் கொண்ட செந்தர விலைப்பட்டியல் குழு அமைக்க 14.3.2024 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), பொ.ப.து.,
முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), நீ.வ.து.,
முதன்மை இயக்குநர், நெடுஞ்சாலைத்துறை
முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர், வனத்துறை
நிதித்துறையை சார்ந்த உறுப்பினர்
பொறியியல் இயக்குநர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
பொறியியல் இயக்குநர், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம்
தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) நெடுஞ்சாலைத்துறை
தலைமைப் பொறியாளர், நீ.வ.து., வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம்
தலைமைப் பொறியாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம்
தலைமைப் பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேற்கண்ட குழு உறுப்பினர்கள் பல்வேறு மட்டத்தில் கட்டுமான பொருட்கள், மற்றும் இதர இனங்களின் விலைகள் குறித்து பல்வேறு தரவுகளின் அடிப்படையில் விவாதித்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 3 தொகுதிகளாக தயாரிக்கப்பட்டுள்ளது.
தொகுதி 1 : பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் நீர்வளத்துறை
தொகுதி 2 : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், இந்து சமய அற நிலையத்துறை மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை.
தொகுதி 3 : வனத்துறை, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் இந்த செந்தர விலைப் பட்டியலை அரசுத் துறைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.