தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு, நிதிப் பகிர்வில் ஒன்றிய பா.ஜ.க. அரசு வஞ்சனை செய்கிறது என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் ஒன்றிய ப.சிதம்பரம் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ப.சிதம்பரம், ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியல் சாசனப்படி ஆட்சி செய்யவில்லை என்று விமர்சித்தார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து, நாடாளுமன்றத்தைக் கூட்டி ஒன்றிய அரசு ஏன் விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கூட்டணி ஆட்சி தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்குள் சர்ச்சை எழுந்துள்ளதாக குறிப்பிட்ட ப.சிதம்பரம், தமிழ்நாட்டிற்குள் பாஜக புகுந்தால் தமிழ்நாடே நாசமாகிவிடும் என்று தெரிவித்தார்.