தமிழ்நாட்டில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என பா.ஜ.க பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த தேர்தலில் கூட அ.தி.மு.க முதுகில் ஏறி தமிழ்நாட்டில் நுழைய பார்த்தது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அனைத்து கதவுகளை மூடி 'உங்களுக்கு தமிழ்நாட்டில் எப்போதும் இடம் இல்லை' என தக்க பதிலடி கொடுத்தனர்.
இதனால், ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் தங்களுக்கு ஓட்டுப்போடாத தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் நோக்கில் எந்த ஒரு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யாமலும், நிதியை நிறுத்தியும் வஞ்சித்து வருகிறது பா.ஜ.க. எல்லா தேர்தலிலுமே பா.ஜ.கவுக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து Go Back என்றே சொல்லி வருகிறார்கள்.
தற்போது 2026 தேர்தலுக்கு முன்பே, பா.ஜ.கவுக்கு ஓட்டு கிடையாது என்பதை தமிழ்நாட்டு மக்கள் இப்போதே தெளிவாக கூறி வருகிறார்கள். இந்த உண்மையை பா.ஜ.க நிர்வாகியே, தனது கட்சித் தலைவரிடம் கூறிய வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
விருதுநகரில் பா.ஜ.கவின் பூத் கமிட்டி நிர்வாகிகள்கூட்டம் நேற்று நடைபெற்றாது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றுள்ளார். அப்போது நிர்வாகி ஒருவர், பொதுமக்களை சந்தித்தபோது, ”நாங்க உங்களுக்கு சோறு கூட போடுவோம். ஆனா ஓட்டுப்போட மாட்டோம்" என சொல்கிறார்கள் என்று நயினார் நாகேந்திரனிடம் அழாத குறையாக கூறியுள்ளார்.
இதை கேட்ட நயினார் நாகேந்திரன் அவருக்கு எந்த பதிலும் கொடுக்காமல், அமைதியாக இருந்துள்ளார். இதை கேட்டு அவருக்கு என்ன அதிர்ச்சி இருக்க போகிறது. இது அவருக்கு தெரிந்த ஒன்றுதானே. 2026 பா.ஜ.கவின் தேர்தல்முடிவு இப்போதே தெரிந்து விட்டது என்று சொல்வதில் எந்த ஐயமும் இல்லை.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ‘இதுதான் பாஜகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கும் பதிலடி’ என்றும், ’இதுதான் தமிழ்நாட்டில் பாஜகவின் நிலை’ என்றும் இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.