மு.க.ஸ்டாலின்

“எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படுபவர் சரோஜாதேவி..” - முதலமைச்சர் இரங்கல்!

சரோஜாதேவி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படுபவர் சரோஜாதேவி..” - முதலமைச்சர் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடகாவின் பெங்களூருவை சேர்ந்த நடிகை சரோஜா தேவி, தனது இளம்வயதிலேயே நடனத்தின் ஆர்வம் உள்ளதால் திரைத்துறையில் ஆர்வம் காட்டினார். தனது 18-வது வயதில் 1955-ம் ஆண்டு கன்னட திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த இவர், தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார்.

அதன்பிறகு தமிழில் 'திருமணம்' என்ற படத்தின் மூலம் தமிழ் மக்கள் முன் தோன்றினார். ஆனாலும் 1958-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். இயக்கி நடித்த 'நாடோடி மன்னன்' மூலம் தமிழ் மக்கள் முன் பெருமளவு பாராட்டப்பட்டார். அதனை தொடர்ந்து சிவாஜி கணேசனுடன் 'பாகப்பிரிவு', ஜெமினி கணேசனுடன் 'கல்யாணப் பரிசு' என அடுத்தடுத்து உச்சபட்ச நடிகர்களுடன் நடித்தார்.

குறிப்பாக எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருடன் நடித்த அன்பே வா, பாலும் பழமும், இருவர் உள்ளம், எங்க வீட்டுப் பிள்ளை என பல படங்கள் இவருக்கு பெருமளவு ஹிட் கொடுத்தது. இதில் இருவர் உள்ளம் திரைப்படம் கலைஞர் கைவண்ணத்தில் உருவானது குறிப்பிடத்தக்கது. சரோஜா தேவியின் கோபால் வசனமும், 'லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்' பாடலும் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒன்றாகவே இருக்கிறது.

“எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படுபவர் சரோஜாதேவி..” - முதலமைச்சர் இரங்கல்!

ஒரு நாளில் 18 மணி நேரம் நடித்து வந்த சரோஜா தேவி, இதற்காவே இவரை திரைத்துறையினருக்கும் பிடிக்கும். சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆருடன் அதிக பாடங்களில் நடித்த நடிகை என்ற பெருமை இவரையே சாரும். காலையில் சிவாஜியுடனும், மாலையில் எம்.ஜி.ஆருடனும் நடித்து வந்த இவர், எம்.ஜி.ஆருடன் 26 படங்களிலும், சிவாஜியுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார்.

இப்படியாக தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் கொடுத்த இவரை ரசிகர்கள் 'கன்னடத்து பைங்கிளி' என்றும், 'அபிநய சரஸ்வதி' என்றும் அன்போடு அழைப்பர். இதைத்தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து திரைத்துறையில் பெருமளவு வாய்ப்புகள் குறையவே, 1997-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'Once More' படத்தில் விஜய்க்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

“எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படுபவர் சரோஜாதேவி..” - முதலமைச்சர் இரங்கல்!

பின்னர் பல ஆண்டுகள் திரையில் பெரிய அளவில் தோன்றாமல் இருந்த இவர், ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான 'ஆதவன்' படத்தில் சூர்யாவுக்கு பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் கூட தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார் சரோஜா தேவி.

இதனிடையே நாட்டின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், மற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் பல அரசு விருதுகளும் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரோஜா தேவி, பெங்களுருவில் உள்ள மல்லேஸ்வரம் என்ற பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது 87 வயதாகும் இவர், வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் காலமானார். நடிகை சரோஜாதேவியின் மறைவு தற்போது இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

“எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படுபவர் சரோஜாதேவி..” - முதலமைச்சர் இரங்கல்!

அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு :

தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெமினி கணேசன் முதலிய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து இரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் சரோஜாதேவி அவர்கள்.

தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் 'அபிநய சரஸ்வதி' எனப் புகழப்பட்டவர். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, உன்னை ஒன்று கேட்பேன், லவ் பேர்ட்ஸ், தொட்டால் பூ மலரும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜாதேவி அம்மையார் அவர்கள்.

சுமார் 200 திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது என எண்ணற்ற பெருமைகளைப் பெற்றவர். எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படும் சரோஜாதேவி அவர்களின் மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories