தமிழ்நாடு

சென்னையில் அதிநவீன மின்சார பேருந்துகள் இயக்கம்! : நாளை (ஜூன் 30) முதல் நடைமுறைக்கு வருகிறது!

சென்னையில் வரும் 30ஆம் தேதி முதல் மின்சார பேருந்துகள் முழுவீச்சில் இயக்கப்பட உள்ளன என தமிழ்நாடு அரசு தகவல்.

சென்னையில் அதிநவீன மின்சார பேருந்துகள் இயக்கம்! : நாளை (ஜூன் 30) முதல் நடைமுறைக்கு வருகிறது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை மாநகரில் தற்போது டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், 5 பணிமனைகளின் மூலம் 625 மின்சாரப் பேருந்துகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மின்சாரப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென 6 இருக்கைகள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு வசதியாக தரை வரை கீழிறங்கும் வகையில் பட்டிக்கட்டு அமைப்புகளுடன் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. பேருந்தின் ஒவ்வொரு இருக்கைக்கு கீழுவும் கைப்பேசி மின்னேற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் அதிநவீன மின்சார பேருந்துகள் இயக்கம்! : நாளை (ஜூன் 30) முதல் நடைமுறைக்கு வருகிறது!

ஒவ்வொரு இருக்கைக்கும் சீட்டு பெல்ட் அமைக்கப் பட்டுள்ளது. மின்சாரப் பேருந்து முழுவதும் 7 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மழைக்காலத்தில் பேருந்துக்குள் தண்ணீர் செல்லாத வகையில் பேருந்தின் உயரத்தை உயர்த்துவதற்கு தனியாக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தானியங்கி பேருந்து நிறுத்த அறிவிப்பு, ஜி.பி.எஸ். வழியாகச் செயல்படும் சிக்னல் அமைப்பு, பெரிய எல்.இ.டி திரைகள், தமிழ், ஆங்கிலத்தில் வழித்தட அறிவிப்பு போன்ற வசதிகளும் மின்சாரப் பேருந்தில் இடம்பெற்றுள்ளன.

banner

Related Stories

Related Stories