தமிழ்நாடு

தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை- அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்!

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை- அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் வீட்டு மின் இணைப்புகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும், அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், -"சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அது தொடர்பாக, ஏற்கனவே 20.05.2025 அன்று வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை- அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்!

எனினும், தற்போது மீண்டும் மின் கட்டணம் குறித்த வதந்திகள் தொடர்ந்து பரவி வருவதால், இதுகுறித்து மீண்டும் அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்படுகிறது. தற்சமயம், மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதனை நடைமுறைப்படுத்தும்போது வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், எந்தவொரு மின் கட்டண உயர்வும் இருக்காது எனவும், தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories