தமிழ்நாடு

50 கட்டணமில்லா குடிநீர் இயந்திரங்கள் : திட்டத்தை தொடங்கி குடிநீர் அருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ரூ.6.04 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 50 கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள்.

50 கட்டணமில்லா குடிநீர் இயந்திரங்கள் : திட்டத்தை தொடங்கி குடிநீர் அருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.6.2025) சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 6.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 50 கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி விதமாக, சென்னை, மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகில் அமைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை தொடங்கி வைத்து, குடிநீரை அருந்தினார்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலமாக பெருநகர சென்னை மாநராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான குடிநீர், பூண்டி, சோழவரம், புழலேரி, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் வாயிலாக நாளொன்றுக்கு 1100 மில்லியன் லிட்டர் குடிநீர் சீரான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் (Water Dispensing Unit) நிறுவி பொதுமக்களுக்கு கட்டணமில்லா தரமான குடிநீர் வழங்க சென்னை குடிநீர் வாரியத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில், தேர்தெடுக்கப்பட்ட இடங்களான பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், கோயில்கள், அரசு மருத்துவமனைகள், வணிக பகுதிகள், இரயில் நிலையங்கள், பள்ளிக்கூடம், கல்லூரி வளாகம், மெட்ரோ இரயில் நிலையம் மற்றும் மெரினா கடற்கரை என 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் 6.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி இயந்திரங்களை 3 ஆண்டுகளுக்கு இயக்கி பராமரிப்பதற்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது.

50 கட்டணமில்லா குடிநீர் இயந்திரங்கள் : திட்டத்தை தொடங்கி குடிநீர் அருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மேலும், குடிநீர் விநியோக குழாயிலிருந்து 3,000 லிட்டர் முதல் 9,000 லிட்டர் கொள்ளளவுள்ள கொண்ட HDPE சின்டெக்ஸ் டேங்குகளில் குடிநீர் சேகரிக்கப்பட்டு, அல்ட்ரா வடிகட்டிகள், கார்பன் வடிகட்டிகள் மற்றும்

புறஊதாக் கதிர் மூலம் சுத்திகரிக்கப்பட்டு துருப்பிடிக்காத சில்வர் டேங்குகளில் சேகரிக்கப்பட்டு தானியங்கி இயந்திரங்கள் மூலம் பொதுமக்கள் 1 லிட்டர் மற்றும் 150 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட பாதுகாப்பான குடிநீர் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி இயந்திரங்கள் அனைத்தும் நவீன IoT (Internet of Things) மூலம் இயக்குதல் மற்றும் பராமரிப்பு செயல் முறையை இணைய அடிப்படையிலான செயலி மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்மூலம் குடிநீர் அளவு குறையும் போது உடனடியாக பகுதி பொறியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேவையான குடிநீர் நிரப்ப நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும். திருட்டு மற்றும் சமூக விரோதிகள் மூலமாக குடிநீர் இயந்திரங்கள் சேதப்படுத்தபடுவதை தடுக்க அனைத்து நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டு சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்படும். இதன்மூலம் பொது மக்களுக்கு பாதுகாப்பான தடையில்லா சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும்.

banner

Related Stories

Related Stories