தமிழ்நாடு

தேனியில் ரூ.13.49 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேனி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 851 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.13.49 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தேனியில் ரூ.13.49 கோடி  மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (16.6.2025) தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 851 பயனாளிகளுக்கு மொத்தம் 13.49 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 578 பயனாளிகளுக்கு 2.96 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை காசோலைகள், 24 நபர்களின் குடும்பத்தினருக்கு இயற்கை மரண உதவித் தொகை காசோலைகள், விபத்துகளில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் உதவித் தொகைக்காளன காசோலைகள், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியின் கீழ் 3 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 8 நபர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணைகள், 4 பயனாளிகளுக்கு ஊரக வீடுகள் பாரமரிப்புத் திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஆணைகள், 8 நபர்களுக்கு முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் ஆணைகள், 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 8.02 கோடி ரூபாய்க்கான வங்கிக் கடன் இணைப்புகளையும் துணை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

தேனியில் ரூ.13.49 கோடி  மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!

தொடர்ந்து 20 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 40 வயதிற்கு மேற்பட்ட 2 திருநங்கைகளுக்கு ஓய்வூதிய திட்ட ஆணைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள்;

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மொத்தம் 35 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், கூட்டுறவுத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு கடனுதவிகள், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கான வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 34 பயனாளிகளுக்கு ஆணைகளையும் துணை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை, பொது சுகாதாரத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் மொத்தம் 851 பயனாளிகளுக்கு மொத்தம் 13,48,87,356 ரூபாய்க்கான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

banner

Related Stories

Related Stories