தமிழ்நாடு

தமிழ்நாட்டில் வன்முறை பெருகிவிட்டதாகப் பரப்பப்படும் விஷமப் பிரசாரம் : தமிழ்நாடு DGP-யின் பதிலடி !

தமிழ்நாட்டில் வன்முறை பெருகிவிட்டதாகப் பரப்பப்படும் விஷமப் பிரசாரம் : தமிழ்நாடு DGP-யின் பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுவதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே எடுத்துரைக்கிறது. ஆனால், சிலர் அரசியல் லாபத்துக்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு DGP அவர்களின் நேர்காணலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதன் விவரம் :

தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகிவிட்டதாகப் பரப்பப்படும் அடிப்படையற்ற விஷமப் பிரசாரங்களுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்துள்ள தமிழ்நாடு DGP அவர்களின் நேர்காணலைப் பகிர்கிறேன்.

📉 #NCRB தரவுகளின்படி குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது.

👮அதேநேரம், #POCSO குற்றங்களை எந்தவித அச்சமும் இல்லாமல், காவல்நிலையத்தில் நம்பிக்கையோடு புகாரளிக்கும் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

🚨 அச்சமின்றிப் புகாரளித்தால்தான், குற்றவாளியை முதல் குற்றத்தின்போதே கைதுசெய்து தண்டனை பெற்றுத்தரமுடியும். இத்தகைய நபர்கள் மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க இது மிக அவசியம்.

🙅🏾‍♂️ ஏற்கெனவே நான் கூறியது போல, குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் #ZeroTolerance - விரைவான விசாரணை - அதிகபட்ச தண்டனை - முன்விடுதலை இல்லை என்பதே நமது அரசின் policy!

banner

Related Stories

Related Stories