கரூர் மாவட்ட மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் மாவட்ட பொது செயலாளர் பொறுப்பு வகித்த கோபிநாத் என்பவருக்கும், அவரது சகோதரி சுமிதா ஆகியோருக்கு சொந்தமான 50 செண்ட் நிலம் கரூர் செம்மடை பகுதியில் உள்ளது. இந்த நிலம் தொடர்பாகவும், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும்இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி கோபியும், அவரது சகோதரி சுமிதாவுக்கு இது தொடர்பாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கரூர் மத்திய நகர பாஜக முன்னாள் தலைவர் கார்த்திகேயன் என்பவர் கோபிக்கு ஆதரவாக பேசி சுமிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் தங்கை மீது ஆத்திரமடைந்த கோபிநாத், சுமிதாவை ஆபாசமாக பேசி, கையில் வைத்திருந்த அரிவாளால் அவரது கை, நெஞ்சு பகுதியில் வெட்டி, அவரை கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சுமிதா அதே காயத்துடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இது தொடர்பாக கோபி மற்றும் கார்த்திகேயன் மீது போலீசிலும் புகார் அளித்தார். இதையடுத்து இதுகுறித்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்படி கரூர் மத்திய நகர பாஜக முன்னாள் தலைவர் கார்த்திகேயனை கரூர் நகர போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். தொடர்ந்து அவரை கரூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து பாஜக முன்னாள் நிர்வாகி கோபி தலைமறைவாகியிருந்த நிலையில், அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.