தி.மு.க ஆட்சி அமையும் போதெல்லாம் நாட்டிற்கே வழிகாட்டும் ஆட்சியாக அவை இருக்கும். சமூக நீதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, அவர்களின் மேம்பாடு, தொழில் வளர்ச்சி, கல்வி உதவி என அடுக்கடுக்கான புதிய திட்டங்களை செயல்படுத்தி நாட்டிற்கே தமிழ்நாடு முன்னுதாரணமாக திகழும் வகையில் இருக்கும்.
அந்தவகையில் தற்போது இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளே திராவிட மாடல் வளர்ச்சியை பின்பற்றும் அளவிற்கு ஆட்சியை சிறப்பாக கொண்டுச் சென்றிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் உலக நாடுகளுக்கு இடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன்படி தங்களுடைய நாடுகளிலும் அத்தகைய திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் சிறப்பாக செயல்படுத்து குறித்து அவ்வபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தொடங்கி அதிகாரிகள்வரை உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்திள்ளார்.
அந்தவகையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் செல்வசிதம்பரம் அவர்கள் பள்ளியில் வழங்கப்பட்டும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் உணவை சாப்பிட்டு, எம்பள்ளி மாணவர்களுக்கு
ரவா கிச்சடி,சாம்பார் மாதிரி உணவை உண்டு கருத்துக்களை பதிவேட்டில் பதிவு செய்தேன்..சிறப்பாக இருந்தது என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “எந்த மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாலும், மாவட்ட ஆட்சியர் போன்ற உயரதிகாரிகளைப் பார்த்தாலும், "உங்கள் பகுதியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் உணவின் தரத்தைப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தீர்களா?" என்று நான் கேட்பது வழக்கம்! அந்த வகையில், ஆசிரியர் ஒருவரே அதைச் செய்திருப்பது கண்டு மகிழ்கிறேன்.
காலை உணவுத் திட்டம் என்பது வெறுமனே மாணவர்களின் பசியைப் போக்கும் திட்டமோ, ஊட்டச்சத்தை அளிக்கும் திட்டமோ மட்டுமல்ல; நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் அது!” எனத் தெரிவித்துள்ளார்.