தமிழ்நாடு

3 நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்... தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தகவல்!

3 நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்... தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 04.06.2025 முதல் 06.06.2025 வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டது என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு முன்பதிவு அடிப்படையில் சிறப்புப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 04.06.2025 (புதன்கிழமை) அன்று தினசரி இயக்கக்கூடிய 1,136 பேருந்துகளுடன் கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கப்பட்டு 73,480 பயணிகளும், 05.06.2025 (வியாழக்கிழமை) அன்று தினசரி இயக்கக்கூடிய 1,136 பேருந்துகளுடன் கூடுதலாக 622 பேருந்துகள் இயக்கப்பட்டு 96,690 பயணிகளும் மற்றும் 06.06.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தினசரி இயக்கக்கூடிய 1,136 பேருந்துகளுடன் கூடுதலாக 798 பேருந்துகள் இயக்கப்பட்டு 1,06,205 பயணிகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மூன்று தினங்களில் பயணிகளின் தேவைக்கேற்பவும், முன்பதிவு அடிப்படையிலும் போதுமான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

3 நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்... தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தகவல்!

இந்நிலையில், புதன்கிழமை அன்று 7,031 பயணிகளும் வியாழக்கிழமை அன்று 8,496 பயணிகளும் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று 9,364 பயணிகளும் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆக மொத்தம் மூன்று தினங்களில் 24,831 முன்பதிவு செய்த பயணிகள் உட்பட 2,76,735 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து 94,926 முன்பதிவு இருக்கைகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வசதி அளித்துள்ள நிலையில் 26% இருக்கைகள் மட்டுமே கடந்த மூன்று தினங்களிலும் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். அரசு பேருந்துகளில் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள பேருந்து இருக்கையில் அதிகபட்சமாக 9% மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது.

பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்கையில் பேருந்து நிலையங்களில் தேவையற்ற விவாதங்கள், முந்தியடித்து ஏறுதல் மற்றும் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுவதை அறவே தவிர்க்கப்படும். மேலும் நள்ளிரவு நேரங்களில் ஒரே நேரத்தில் மிக அதிகளவில் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ள வருகை புரிவதால் பயணிகளுக்கு தவிர்க்க முடியாத சிரமம் ஏற்படுகிறது.

எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ளளும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயணிகள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்யும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகளை இயக்கிட வழிவகை செய்யப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறோம்.

எனவே பயணிகள் தங்களது பயணத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து எந்தவித சிரமமின்றி பயணம் செய்திட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

banner

Related Stories

Related Stories