தமிழ்நாடு

ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் உடலுக்கு காவல்துறை மரியாதை... முதலமைச்சர் உத்தரவு!

ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் உடலுக்கு காவல்துறை மரியாதை... முதலமைச்சர் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஓய்வுபெற்ற நீதியரசரும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் (வயது 89) உடல்நலக் குறைவால் இன்று (06.06.2025) இயற்கை எய்தினார்.

நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்கள், 1988 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியவர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக 2006 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இவர், 2015 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் நீடித்தார்.

இவரது பரிந்துரையின் அடிப்படையில் தான் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு, கிறித்தவர்கள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் இட ஒதுக்கீடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன. சமூகநீதி வரலாற்றில் தமது முத்திரையை மிகவும் ஆழமாக பதித்தவர் இவர்.

இந்த நிலையில், இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், நீதித்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்த நிலையில், தற்போது இவரது இறுதி நிகழ்வு காவல் துறை மரியாதையுடன் நடைபெறும் ஏன்னு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களின் மறைவு சமூக நீதித்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அன்னார் நீதி துறைக்கும், மாநிலத்திற்கும் ஆற்றிய சேவையை போற்றும் வகையில் அவரது இறுதி நிகழ்வு காவல் துறை மரியாதையுடன் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories