மதுரையில், உத்தங்குடி கலைஞர் திடலில் திமுக பொதுக்குழு கூட்டம். இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தடைந்தார்.
பின்னர் வில்லாபுரத்தில் இருந்து திருமலை நாயக்கர் சிலை வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ரோடு ஷோ சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. அப்போது சாலையில் இருபுறங்களிலும் இருந்து பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை முதல் மேயர் எஸ்.முத்து அவர்களின் புதுப்பிக்கப்பட்ட சிலையை திறந்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று பொதுக்குழு கூட்டம் அரங்கம் முன்பு 100 அடி உயர திமுக கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. இதில் திமுக கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றிவைத்து பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னதா, கூட்ட அரங்கிற்கு வருவதற்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொதுக்குழு கூட்டத்தின் முகப்பு அரங்கம் சென்னை அண்ணா அறிவாலயம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்ட அரங்கிற்கு கலைஞர் திடல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. முகப்பு அரங்கில் பெரியார், அண்ணா, கலைஞர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.