தமிழ்நாடு

”எளிய மக்களின் கடைசி புகலிடத்திற்கும் பூட்டு” : ஒன்றிய நிதி அமைச்சருக்கு சு.வெங்கடேசன் MP கடிதம்!

ரிசர்வ் வங்கி விதிமுறைகளை திரும்பப் பெறுமாறு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

”எளிய மக்களின் கடைசி புகலிடத்திற்கும் பூட்டு” : ஒன்றிய நிதி அமைச்சருக்கு 
சு.வெங்கடேசன் MP கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்து ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்கி வைப்பர்கள். இதற்கு காரணம் திடீர் அவசர பணத்தேவைக்கு தங்களிடம் உள்ள நகையை அடகு வைத்து பணத்தை பெற்று அப்போதையை சூழலை சமாளிப்பார்கள். பிறகு பணத்தை கொடுத்து நகை மீட்டுக் கொள்வார்கள். இதில் காலக்கெடு என்பது கிடையாது. ஆனால் வட்டிதான் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

இந்நிலையில், குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும். அதற்கு அடுத்த நாளில்தான் அந்த நகையை சம்பந்தப்பட்டவரால் மீண்டும் அடமானம் வைக்க முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனை க்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனையை உடனே திரும்ப பெற வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி விதிமுறைகளை திரும்பப் பெறுமாறு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "கடன் அளவு குறைப்பு, நகை அடகு வைத்தாலும் வருமானத் தகுதி நிபந்தனை, பயன்பாட்டுச் சான்று என்ற பெயரால் கடன்தாரர் உரிமை பறிப்பு, ஒவ்வொரு முறை கடனுக்கும் புதிய கடன் தகுதி பரிசீலனை எனக் கட்டணச் சுமை, நகை உடைமைச் சான்று எனப் போகாத ஊருக்கு வழி, தங்க நாணயங்களுக்கு நிபந்தனை, கடன் தொகை நிர்ணய முறைமையில் கடன் விகிதத்தில் குறைப்பு, கடனை திருப்பி கட்டினாலும் ஏழு நாள் கழித்து நகை என இழுத்தடிப்பு.

எளிய மக்களை, சிறு வணிகர்களை கழுத்தைப் பிடித்து கந்துவட்டிக்காரர்களிடமும், நகை கடன் வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தள்ளுகிற ரிசர்வ் வங்கி விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories