இந்தியா

மக்களுக்கு அடுத்தடுத்து இடி.. தங்க நகை கடன் தொடர்பாக RBI வெளியிட்ட 9 முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

மக்களுக்கு அடுத்தடுத்து இடி.. தங்க நகை கடன் தொடர்பாக RBI வெளியிட்ட 9 முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலகம் முழுவதும் தங்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தாலும், இந்தியாவில் தங்கத்துக்கான முக்கியத்துவம் இன்னும் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் நல்ல நாள், திருமணம் போன்ற விசேஷங்கள், அக்ஷய திருதியை போன்ற நாட்களில் கூட தங்கம் வாங்கி மகிழ்வர். இப்படியாக தங்கத்தின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனினும் ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்கி வைப்பர். காரணம் எதாவது ஆத்திர அதனை அடகு வைத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று. அதன்படி தற்போதுள்ள நிலவரப்படி பலரும் அவசர பணத்தேவைக்கு தங்களிடம் உள்ள நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்று வந்தனர். இதில் தனியார் கடைகளில் வட்டி அதிகம் என்பதால், பலரும் வங்கிகளில் வைத்து வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு RBI புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஒருவர் தனது நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்தால், குறித்த காலக்கெடு முடியும் தருவாயில், அதற்கான வட்டியை மட்டும் கட்டிவிட்டு, நகையை மறு அடமானம் வைத்துக்கொள்ளலாம்.

மக்களுக்கு அடுத்தடுத்து இடி.. தங்க நகை கடன் தொடர்பாக RBI வெளியிட்ட 9 முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

ஆனால் இந்த மே மாதம் முதல் இந்த முறையை ரிசர்வ் வங்கி முற்றிலுமாக மாற்றியது. அதன்படி குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும். அதற்கு அடுத்த நாளில்தான் அந்த நகையை சம்பந்தப்பட்டவரால் மீண்டும் அடமானம் வைக்க முடியும். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இது பெருவாரிய மக்களை பெருமளவு பாதித்தது. இந்த அதிர்ச்சியில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது ரிசர்வ் வங்கியின் மேலும் ஒரு அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, அதற்கான 9 அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளன.

அந்த அறிவிப்புகள் வருமாறு :

* தற்போது தங்கத்தின் மதிப்பில் இருந்து 90% வரை கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி 75% மட்டுமே கடன் வழங்கப்படும். அதாவது ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம்தான் கடன் வழங்கப்படும்.

* தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற உரிய ஆவணத்தை சமர்பிக்க வேண்டும்.

* வங்கிகள், தங்கத்தின் மீது கடன் வழங்கும்போது, அந்த தங்க நகையின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு தரச்சான்றிதழ் வேண்டும்.

மக்களுக்கு அடுத்தடுத்து இடி.. தங்க நகை கடன் தொடர்பாக RBI வெளியிட்ட 9 முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

* தங்க நகைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானமாக ஏற்கப்படும்.

* தங்க நகைபோல், வெள்ளி பொருட்களுக்கும் கடன் வழங்கலாம். அந்த வெள்ளி 1 கிலோவிற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

* ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை மட்டுமே அடமானமாக வைக்க அனுமதிக்கப்படும்.

* தங்க நகை கடன் வழங்குபவர்கள் 22 காரட் தங்கத்தின் விலையை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் மதிப்பை கணக்கிட வேண்டும்.

* கடன் தொகையை திருப்பி செலுத்திவிட்டால், 7 வேலை நாட்களுக்குள் தங்கத்தை திருப்பி தர வேண்டும்.

* அடமான நகையை திருப்பி தர தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 பணத்தை கடன் வழங்கிய நிறுவனம் வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டும்.

banner

Related Stories

Related Stories