தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 3,5,8-ம் வகுப்பு மாணவர்களின் கல்விதரம் தேசிய சராசரியை விட அதிகம் - அரசின் ஆய்வில் தகவல் !

தமிழ்நாட்டில் 3,5,8-ம் வகுப்பு மாணவர்களின் கல்விதரம் தேசிய சராசரியை விட அதிகம் - அரசின் ஆய்வில் தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்த ஆய்வு அறிக்கையை மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்..

தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில திட்டக் குழு அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநில அளவிலான அடைவுத் தேர்வு - 2025 முடிவுகளின் "State Level Achievement Survey" குறித்து தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசு முதல்முறையாக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறக்கூடிய 45 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகளில் 3 , 5, 8 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது...

தமிழ்நாட்டில் 3,5,8-ம் வகுப்பு மாணவர்களின் கல்விதரம் தேசிய சராசரியை விட அதிகம் - அரசின் ஆய்வில் தகவல் !

2021 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு எடுத்த சர்வே உடன் ஒப்பிடுகையில், தமிழகத்தின் சராசரி விகிதம் அதிகரித்துளைத்து. வழக்கமாக இது போன்ற கற்றல் அடைப்பு திறன் ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே மேற்கொள்ளும். ஆனால் தமிழ்நாடு அரசு முதல் முறையாக இந்த ஆய்வை மேற்கொண்டது. 3 , 5, 8வகுப்புகளின் மாணவர்கள் கற்றல் அடைவு திறன் ஆய்வு மேற்கொண்டதில் தேசிய சராசரியை விட தமிழகத்தில் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. எ

3,5,8 வகுப்பு படிக்கும் குழந்தைகளில், 9 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் சர்வே எடுக்கப்பட்டது. அனைத்து குழந்தைகளையும் கவர் செய்யாவிட்டாலும், அனைத்து பள்ளிகளையும் கவர் செய்திருக்கிறோம். எதிர்பார்த்ததை விட மாணவர்கள் சிறப்பாக படிக்கின்றனர். கொரோனா பாதிப்பு இன்னும் நீங்கவில்லை. 8 ம் வகுப்பு மாணவர்கள், கணித த்தில் பின் தங்கி உள்ளனர். இதை, கல்வித்துறை சரி் செய்யும்.

எண்ணும் எழுத்தும் திட்டம் கை கொடுத்திருக்கிறது. நாங்கள் தற்போது சுட்டிக் காட்டி இருக்கக்கூடிய அம்சங்கள் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். குறைகளை சரி செய்து இருக்கிறார்களா என்பதை அறிய வேண்டுமென்றால் மீண்டும் சர்வே எடுக்க வேண்டும். எனவே அடுத்த ஆண்டும் நாங்கள் சர்வே எடுப்போம். தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் 3,5,8ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி தரம் நன்றாக உள்ளது, மாநில திட்டம் குழு மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 45,924 பள்ளிகளில் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் மேற்கொண்டு ஆய்வில் இந்த விவரங்கள் கிடைக்க பெற்று உள்ளது.

banner

Related Stories

Related Stories