தமிழ்நாடு

”மாணவர் கீர்த்திவர்மாவுக்கு விரைவில் கை மாற்று அறுவை சிகிச்சை” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மாணவர் கீர்த்தி வர்மனுக்கு விரைவில் கை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

”மாணவர் கீர்த்திவர்மாவுக்கு விரைவில் கை மாற்று அறுவை சிகிச்சை” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

+2 தேர்வில் இரு கைகளும் இன்றி 471 மதிப்பெண் பெற்ற கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாணவன் கீர்த்திவர்மாவுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விரைவில் கை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” தமிழ்நாட்டில் உறுப்பு தனத்திற்கு பெரிய அளவில் வரவேற்பும் வழிகாட்டுதலும் உள்ளது. நேற்று வெளியான 12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற, இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்திவர்மா, தனக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவுமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து இருந்தார்.

மாணவரின் கோரிக்கையை அடுத்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தமிழ்நாடு அரசு உதவும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் மாணவர் கீர்த்தி வர்மாவுக்கு தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து கைகளை தானமாக பெற்று விரைவில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும். மாணவரின் சிகிச்சைக்கு ஏதுவாக சென்னையிலேயே அவரது கல்லூரி படிப்பை மேற்கொள்ள அரசு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும். இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே அதிக அளவில் உடல் உறுப்பு தானம் செய்தது தமிழ்நாட்டில்தான்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories