தமிழ்நாடு

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு : 95.03% மாணவர்கள் தேர்ச்சி!

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு : 95.03% மாணவர்கள் தேர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினர். இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. இப்பணி அண்மையில் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். இதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 0.47% கூடுதலாக தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

மேலும் தேர்வு எழுதிய 4,19,316 மாணவர்களில் 4,05,472 (96.70%) மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் தேர்வு எழுதிய 3,73,178 மாணவிகளில் 3,47,670 (93.16%) மாணவிகள் தேர்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட 3.54% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல் 2,638 மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் 436 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. ஏதேனும் ஒரு பாடத்தில் 26,887 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதேபோல் 2853 அரசுப் பள்ளி மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு கணினி அறிவியல் பாடத்தில் 9,536 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளனர். அதேபோல் கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 4,208 மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 3,181 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்று அசத்தி இருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories