முரசொலி தலையங்கம்

”சுயநல ஊழல் கூட்டணிதான் அதிமுக - பாஜக கூட்டணி” : முரசொலி தலையங்கம்!

தன்னைக் காக்க பழனிசாமியும், தனது கட்சிக் காக்க அமித்ஷாவும் அமைத்துள்ள சுயநல ஊழல் கூட்டணிதான் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆகும்.

”சுயநல ஊழல் கூட்டணிதான் அதிமுக - பாஜக கூட்டணி” : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (08/05/2025)

“ஆமாம்! மிரட்டல்தான்!”

திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள்.

"பா.ஜ.க. தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அ.தி.மு.க.வை அடக்கி விட்டது. பழனிசாமிக்கும் வேறு வழியில்லை, பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக் கொள்ளா- விட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால் பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக் கொண்டு விட்டார். பலவிதங்களில் மிரட்டித்தான் அ.தி.மு.க.வை பணிய வைத்திருக்கிறார்கள். பா.ஜ.க.வுடன் அமைக்கப்பட்டிருக்கும் கூட்டணியால் பல அ.தி.மு.க.வினர் அதிருப்தியில் உள்ளனர்”என்பது அவரது உரையின் உள்ளடக்கம் ஆகும்.

இதற்குப் பதில் அளித்திருக்கும் பழனிசாமி, “எங்களைப் பார்த்து ஸ்டாலின் பயந்துவிட்டார். நாங்கள் பா.ஜ.க.வுடன் மகிழ்ச்சியாகத்தான் கூட்டணி வைத்துள்ளோம்” என்று சொல்லி இருக்கிறார்.

“எங்களுக்கும் பா.ஜ.க.வுக்கும் கொள்கை ரீதியான உடன்பாடு ஏற்பட்டு விட்டது, அதனால்தான் கூட்டணி வைத்துள்ளோம்” என்று பழனிசாமியால் சொல்ல முடியவில்லை. மாறாக, 'மகிழ்ச்சியாகத்தான் கூட்டணி வைத்துள்ளோம்’ என்று சொல்கிறார் பழனிசாமி. கூட்டணிக்கும், மகிழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? இது என்ன கல்யாண சம்பந்தமா?

அதில் மகிழ்ச்சி இல்லை என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா - பழனிசாமி ஆகிய இருவரும் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பைப் பார்த்தாலே தெரியுமே? மூன்று தடவைகள் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கான ‘பேனர்' மாற்- றப்பட்டது. இது கூட்டணிக்கான சந்திப்பாக முதலில் இருந்தது. பின்னர், அது பா.ஜ.க. சந்திப்பாக மாற்றப்பட்டது. மீண்டும் கூட்டணிக்கான சந்திப்பாக பெயரை மாற்றிக் கொண்டே இருந்தார்கள். இடைப்பட்ட நேரத்தில் பழனிசாமி ‘கதி’ என்ன ஆனது என்பது ஊருக்கே தெரியும்.

அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பழனிசாமியை அமித்ஷா பேசவிடவில்லை. எல்லா விமான நிலைய வாசல்களிலும் வாய்க்கொம்பு சுற்றும் பழனிசாமி, அடக்கமாக கை கட்டி அன்று உட்கார்ந்து இருந்தார். அவரை ஒரு மரியா- தைக்குக் கூட, 'கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம்' என்று சொல்ல அமித்ஷா அனுமதிக்கவில்லை. தான் சொல்ல வந்ததைச் சொல்லி விட்டு, அமித்ஷா கிளம்பினார். ‘எங்களுக்கு கட்சி நடத்தத் தெரியும், நாங்கள் கட்சி நடத்திக் கொள்கிறோம், தேவையில்லாத கேள்வி கேட்கக் கூடாது' என்று நிருபர்களை எச்சரித்துவிட்டு விருட்டென்று வெளியேறினார் அமித்ஷா.

கூட்டணி உருவானால், 'இருவரும் இணைந்து கை தூக்க வேண்டும்' என்று சொல்லி அமித்ஷாவை அழைத்து வந்தார்கள். அதன்பிறகு தான் வேண்டா வெறுப்புடன், பழனிசாமியுடன் கை தூக்கினார். இவை அனைத்தும் ரகசியங்கள் அல்ல, ஊடகங்களில் மக்கள் பார்த்தவைதான். ஊடகங்களில் இன்றும் இருப்பவைதான்.

”சுயநல ஊழல் கூட்டணிதான் அதிமுக - பாஜக கூட்டணி” : முரசொலி தலையங்கம்!

சென்னைக்கு அமித்ஷா வருவதற்கு முன்னால், டெல்லிக்குச் சென்றார் பழனிசாமி. 'மகிழ்ச்சியான சந்திப்பாக' இருக்குமானால் சென்னை விமான நிலையத்திலும், டெல்லி விமான நிலையத்திலும் சொல்லிவிட்டே போயிருக்கலாம், தவறில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி பேசப் போகிறேன், உள்துறை அமைச்சரைச் சந்திக்கப் போகிறேன் என்று சொல்வது ‘குற்றச் செயலும்' ஆகாது. ஆனால் பழனிசாமியால் சொல்ல முடியவில்லை. மூன்று வாகனங்கள் மாறிப் போய் அமித்ஷாவைப் பார்க்கும் அளவுக்கு அது தவறான செயலும் அல்ல. 'நான் அ.தி.மு.க. அலுவலகத்தைப்பார்க்க வந்தேன்' என்று சொல்லிவிட்டு அமித்ஷாவை பார்க்கப் போனதுதான் மர்மத்தின் தொடக்கம் ஆகும்.

அது வரை என்ன சொல்லிக் கொண்டிருந்தார் பழனிசாமி. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று சொல்லி வந்தார். பா.ஜ.க.வின் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்துப் போட்ட முன்னாள் எம். எல்.ஏ.வை கட்சியை விட்டு நீக்கி- னார். ‘அண்ணாமலைக்கு என்ன தெரியும்?' என்று கேட்டார். ‘2026 ஆம் ஆண்டு மட்டுமல்ல, 2931 ஆம் ஆண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை' என்று சொன்னார். ‘பா.ஜ.க.வுடன் சேர்ந்ததால்தான் தோற்றோம்' என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தார். அதையே பலரும் வழிமொழிந்து கொண்டிருந்தார்கள்.

இத்தகைய சூழலில் தான் பழனிசாமியின் உறவினர்களுக்குச் சொந்தமான 26 இடங்களில் ரெய்டு நடந்தது. ‘750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த எடப்பாடியின் உறவினர்”, என்று ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டன. பழனி- சாமி, மீண்டும் பா.ஜ.க.வின் பாதத்தில் சரணாகதி அடைந்தார். அவர் மிரட்டப்பட்டது பட்டவர்த்தனமாகவே ஊருக்கு அம்பலம் ஆனது. இதை மறைக்க தி.மு.க. மீது பாய்கிறார் பழனிசாமி. அவர் எடுத்த அரசியல் முடிவு அ.தி.மு.க.வையே பழிவாங்கப் போகிறது என்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் உணர்ந்து வருகிறார்கள் என்பதுதான் முழு உண்மை ஆகும்.

"பா.ஜ.க. - அ.தி.மு.க. இடையே கள்ளக் கூட்டணி இருக்கிறது” என்று சொல்லி வந்தார் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். அந்தக் கள்ளக் கூட்டணி மெள்ள மெள்ள வெளிச்சத்துக்கு வந்து வெளிப்படையான கூட்ட- ணியாக மாறி இருக்கிறது. இதற்குக் காரணம், ‘அமித்ஷாவின் மிரட்டல்தான்'.

ஏனென்றால், "இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் ஊழல் நடக்கிறது” என்று பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது 9.7.2819 அன்று சொன்னவர் அமித்ஷா. இன்று அவர் எப்படி பழனிசாமியுடன் கைகோர்த்தார்? பா.ஜ.க. தனியாக நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது என்பதை அமித்ஷா அறிவார்.

தன்னைக் காக்க பழனிசாமியும், தனது கட்சிக் காக்க அமித்ஷாவும் அமைத்துள்ள சுயநல ஊழல் கூட்டணிதான் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆகும்.

banner

Related Stories

Related Stories