கோடை காலத்தில் ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை கண்டு மகிழ்ந்திடும் வகையில்தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் மண்டலம் சார்பாக பேக்கேஜ் (Package) பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் :
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் மண்டலம் சார்பாக கோடை விழாவை முன்னிட்டு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக எற்காடு மலைப்பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை கண்டு மகிழ்ந்திடும் வகையில் உள்வட்ட சிறப்பு பேருந்து ஒன்று இயக்கப்படவுள்ளது.
இச்சிறப்பு பேருந்து 04.05.2025 முதல் கோடை காலம் முடியும் வரை காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேக்கேஜ் (Package) பேருந்து புறப்பட்டு ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான 1) கரடியூர் காட்சி முனை, 2) சேர்வராயன் கோவில், 3) மஞ்சக்குட்டை காட்சி முனை, 4) பக்கோடா பாபிண்ட் 5) லேடீஸ் சீட், 6)ஜென்ஸ் சீட் 7) ரோஸ் கார்டன். 8) எற்காடு எரி. 9) அண்ணா பூங்கா, 10) மான் பூங்கா. 11) தாவரவியல் தோட்டம் ஆகிய இடங்களை கண்டு கழித்து மீண்டும் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாலை 7.00 மணிக்கு பேக்கேஜ் (Package) நிறைவு செய்யும் வகையில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சிறப்பு பேருந்துக்கு ஒரு பயணிக்கு ரூ.300/-கட்டணமாகவும் 1/2 கட்டணம் ரூ.150/- ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் வசதிக்காக பேக்கேஜ் (Package) பயணத்திற்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் வழியாகவும். இணையத்தளம் (www.tnstc.in) மற்றும் App (tnstc bus ticket booking app) வழியாகவும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் இவ்வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே மேற்கண்டவாறு சிறப்பு பேருந்து இயக்கம் செய்யப்படவுள்ளதால், பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்திடும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்ற விபரத்தினை பொதுமக்கள் அறிந்து பயன் பெறும் வகையில் அனைத்து தினசரி செய்தித்தாள்களில் நிர்வாக இயக்குநர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) வரை., தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.