தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலன் மானியக் கோரிக்கையில், அமைச்சர் எஸ்.எம். நாசர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
1. இலங்கை தமிழர் முகாம்களில் ரூ.49,87,500 மதிப்பீட்டில் கணினி வசதியுடன் கூடிய படிப்பகம் அமைக்கப்படும்.
2. அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு Medical Facilitation cell அமைக்கப்படும்.
3. நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளி இறுதி ஆண்டு முடித்தவர்களுக்கு உலகளாவிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கித் தரும் நோக்கத்தை வழிநடத்த TNSKILLS இன்டர்நேஷனல் நிறுவப்படும்.
4. வெளிநாடுகளில் வேலைக்க சென்று இறந்த வறிய நிலையில் உள்ள அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
5.சென்னை, திருநெல்வேலி, கரூர், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் திருநெல்வேலி, விழப்புரம், தஞ்சாவூர் ஆகிய 3 மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு கிறிஸ்த்துவ மகளிர் உதவும் சங்கம் புதிதாக துவங்கப்படும்.
6. கல்லறைத்தோட்டம், கபர்ஸ்தான்களில் உள்ள பழுதடைந்த சுற்றுச்சுவர்களை சீரமைத்தல், புதிதாக சுற்றுச்சுவர் அமைத்தல், பாதைகளை புனரமைக்க முதற்கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
7. சிறுபான்மை மாணவர்கள் வெளிநாடுகளில் பட்டமேற்டிப்பு மேற்கொள்ள கல்வி உதவித் தொகை வழங்கும் புதிய திட்டம் துவங்கப்படும்.
8.சிறுபான்மையின புத்த சமயத்தினர் நாக்பூர் தீஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொள்ள மானிய உதவி நபர் ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
9.புத்த, சமண மற்றும் சீக்கிய மக்களுக்கான புனித பயணத்திற்கு மானிய உதவி வழங்கப்படும்.
10. வக்ஃப் சொத்துக்களின் நில அளவை பணிகளை விரைவுப்படுத்த கூடுதலாக 20 உரிமம் பெற்ற நில அளவையர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
11. பெருமராமத்து மற்றும் பழுதுபார்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகை ரூ.15 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.