அண்ணல் அம்பேத்கர் பிறந்தாள் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வகையில் இன்று வேலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன், 1523 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "அண்ணல் அம்பேத்கர் என்ற மாமனிதர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் உரியவர் அல்ல. அனைவருக்குமானவர். அனைத்து சமூக மக்களுக்காகவும் பாடுபட்டவர் அம்பேத்கர்.
ஒருசிலர் அவரை குறுகிய வட்டத்தில் அடைக்க பார்க்கிறார்கள். எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்திய அரசியல் சட்டத்தை அம்பேத்கர் நமக்கு கொடுத்து இருக்கிறார். யார் ஏழையாக இருந்தாலும், அவர் என் சமூம் என்று கூறியவர் அண்ணல் அம்பேத்கர்.
சாதி, மதம் வித்தியாசம் இல்லாமல் அனைவரது வீடுகளிலும் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்தை வைக்க வேண்டும். இதுதான் நாம் அவருக்கு செய்யும் நன்றியாகும்" என தெரிவித்துள்ளார்.