தமிழ்நாடு

பேருந்தில் தவறவிட்ட ரூ.73,000 : ஓட்டுநர், நடத்துநர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

சென்னையில், பேருந்தில் தவற விட்ட ரூ.73 ஆயிரம் பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைந்த ஓட்டுநர், நடத்துனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பேருந்தில் தவறவிட்ட ரூ.73,000 : ஓட்டுநர், நடத்துநர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை 70 v என்ற தடம் எண் கொண்ட பேருந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் இப்பேருந்தில் பெண் பயணி ஒருவர் பயணம் செய்துள்ளார்.

அப்போது, அவர் எடுத்துவந்த ரூ.73 ஆயிரம் பணம் பையை பேருந்திலேயே தவறுதலாக மறந்துவைத்துவிட்டு, இறங்கிசென்றுள்ளார். பிறகு பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தில் பார்த்தபோது பை ஒன்று இருந்துள்ளது.

இதை ஓட்டுநரும், நடத்துனரும் எடுத்து திறந்து பார்த்துள்ளனர். இதில் பணக் கட்டுகள் இருந்தை அடுத்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இது பயணி ஒருவர் தவறவிட்டுச் சென்ற பணம் என தெரியவந்தது.

பின்னர் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பணப்பையை தவறவிட்ட பெண் பயணியை உடனே கண்டுபிடித்து அவரிடம் ரூ.73 பணத்தை ஒப்படைத்துள்ளனர். இப்பணம் மீண்டும் கிடைக்க உதவிய ஓட்டுநர், நடத்துநருக்கு அப்பெண் நன்றி தெரிவித்தார்.

பயணி தவறவிட்ட பணத்தை மீண்டும் அவரிடம் கொடுத்த நடத்துநர் வரதராஜ பெருமாள் மற்றும் ஓட்டுனர் இளங்கோ ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அரசு பேருந்தில் தவறவிட்ட எந்த ஒருபொருளும் காணாமல்போகாது மீண்டும் உரிய நபருக்கே கிடைக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories